வியாழக்கிழமை, மார்ச் 28, 2024
வியாழக்கிழமை, மார்ச் 28, 2024

HomeFact Checkபொன். ராதாகிருஷ்ணன் நமீதா படத்தை வீட்டில் ஒட்டினாரா?

பொன். ராதாகிருஷ்ணன் நமீதா படத்தை வீட்டில் ஒட்டினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் நமீதா படத்தை ஒட்டியதாகப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/RajiniOffl/status/1289940746854793216
வைரலான பதிவு.

Fact Check/Verification

பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜகவின் மூத்தத் தலைவராவார். இவரை பொன்னார் என்று அவர் கட்சியினர் அழைப்பர். இவர் 1999 ஆம் ஆண்டு நாகர்கோவிலிலும், 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரியிலும் பாராளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் நமீதாப் படத்தை சுவற்றில் ஒட்டுவதுப் போன்ற புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய முனைந்தோம்.

உண்மை என்ன?

வைரலான செய்தியில் பரப்பப்பட்ட இமேஜை ரிவர்ஸ் சர்ச் செய்கையில் இதன் உண்மை நமக்குத் தெரிய வந்தது.

தமிழகத்தில் தற்போது பரப்பரப்பாக பேசப்படும் சர்ச்சை, கந்த சஷ்டிக் கவச சர்ச்சை.

நாம் ஏற்கனவே “ஆ.ராசா கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகப் பேசினாரா?” எனும் தலைப்பில் வந்தக் கட்டுரையில், இதுக்குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்.

இந்த சர்ச்சைக்கு பல்வேறுத் தரப்பினரும் எதிர்வினையாற்றி வருகின்றனர், அதில் பாஜகவினரும், இந்து மத அமைப்பினரும் குறிப்பிடத் தக்கவர்கள்.

இச்சர்ச்சையின் விளைவாக #கந்தனுக்கு அரோகரா, #வெற்றிவேல் வீரவேல் போன்ற ஹேஷ்டேகுகள் சமூக வலைத்தளங்களில் இந்தியா முழுவதும் பிரபலமாகியது.

இதன் தொடர்ச்சியாக பாஜகவினர் ஒவ்வொரு வீடாக முருகர் படத்தை ஓட்டினர். பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில், முருகர் படத்தை தன் கையாலேயே ஒட்டி இந்நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இதனை தனது டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

பொன்.ராதகிருஷ்ணன் அவர்களின் டிவிட்டர் பதிவு.

இந்தப் படத்தையே எடிட் செய்து முருகர் படத்திற்குப் பதிலாக, நமீதா படத்தை மாற்றியுள்ளனர் என்று நம் ஆய்வில் அறிய முடிகிறது.

உண்மையானப் படத்தையும் எடிட் செய்தப் படத்தையும் ஒப்பிட்டு கீழேக் கொடுத்துள்ளோம்.

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின், பொன்.ராதகிருஷ்ணன் அவர்கள் முருகர் படத்தையே ஒட்டியுள்ளார் என்றும், அப்படத்தையே எடிட் செய்துள்ளார்கள் என்றும் நமக்குத் தெளிவாகிறது.

Result: Misleading

Our Sources

Twitter Page: https://twitter.com/RajiniOffl/status/1289940746854793216/photo/1

Twitter Page: https://twitter.com/PonnaarrBJP/status/1289572081118539778

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular