வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் நீக்கமா?

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் நீக்கமா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஈரோடு ரயில் நிலையம் குறித்து வைரலாகும் பதிவு
Source: Facebook

தமிழகத்தை பொறுத்த வரை எப்பொழுதும் இந்திக்கும், தமிழுக்கும் ஏழாம் பொறுத்தம் தான்.தான். இந்தியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எவ்வாறு புகுத்த நினைத்தாலும் அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறும்.

இந்நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர்பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர்பலகை வைக்கப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

https://www.facebook.com/hardiksaran.saran.3/posts/1151160258660948

Archive Link: https://archive.vn/gVaFl

https://www.facebook.com/abdulla1pallavaram/posts/1929117257251421

Archive Link: https://archive.vn/IDO55

https://www.facebook.com/permalink.php?story_fbid=118199096891687u0026amp;id=100061047903250

Archive Link: https://archive.vn/NQ79y

இப்புகைப்படத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

ஈரோடு ரயில் நிலையம் குறித்து பரவும் பதிவு
Source: Facebook

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இப்புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக தகவல் பரவியதால் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அதிகாரியைத் தொடர்புக் கொண்டு இதுக்குறித்து   கேட்டோம்.

இதற்கு அவர்கள், “நாங்கள் உரிய அதிகாரிகளுக்கு இவ்விஷயத்தை தெரியப் படுத்தி விட்டோம். அவர்கள் தேவையானதை செய்வார்கள் என்று பதிலளித்தனர்.  இதை தவிர்த்து  தகவல்கள் ஏதும் அவர்கள் தரப்பிலிருந்து கிடைக்கவில்லை.

இதன்பின் தெளிவான உண்மையைப் பெற இதுக்குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.  நம் ஆய்வில், “Works at Erode Railway Station to be completed on time” எனும்  தலைப்பில் தி இந்துவில் வந்த ஒரு செய்தியை நம்மால் காண முடிந்தது.

 ஈரோடு ரயில் நிலையத்தின் டிக்கட் கொடுக்குமிடம், முன்பதிவு செய்யும் இடம், பயணிகள் காத்திருக்கும் பகுதி ஆகியவற்றில் கட்டுமானப் பணி நடைபெறுகின்றது எனும் தகவல் இச்செய்தியின் வாயிலாக நமக்கு தெரிந்தது.

ஈரோடு ரயில் நிலையம் குறித்து இந்துவில் வந்தச் செய்தி.
Source: The Hindu

இதன்பின் கோகுல் என்பவர் டிவிட்டரில்  பதிவிட்ட பதிவு ஒன்றை நம் கண்ணில் தென்பட்டது.  அப்பதிவில்,

“நான்  ஈரோட்டைச் சேர்ந்தவன். இது முகப்புப் பக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இடது புறத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது; வலது புறத்தில் இந்தியில் எழுதப்பட்டுள்ளது; முகப்பு பக்கத்தில் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

வைரலாகும் படம் ரயில் நிலையத்தின் வலதுபுற பகுதி.”

என்று  கோகுல் பதிவிட்டிருந்தார். கூடவே ஈரோடு ரயில் நிலையத்தின் தற்போதைய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டிருந்தார்.

ஈரோடு ரயில் நிலையம் குறித்த பதிவு
Source: Twitter

கோகுல் அவர்களின் பதிவைக் கண்டபின், ஈரோடு  ரயில் நிலையம் மற்றும் அதன் பெயர் பலகை குறித்து இணையத்தில் தேடினோம்.  அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யூடியூபில் பதிவிட்ட விடியோ ஒன்றை நம்மால் காண முடிந்தது.

அவ்வீடியோ உங்கள் பார்வைக்காக:

https://www.youtube.com/watch?v=x46wUsB9Y7Au0026amp;t=2s
Source: YouTube

இவ்வீடியோவைக் கண்டபின் கோகுல் பதிவிட்ட பதிவிட்ட தகவலும், புகைப்படமும் முற்றிலும் சரியானவை என்பது நமக்கு தெளிவாகியது.  

ஈரோடு ரயில் நிலையத்தில் முன்பு, முகப்புப் பக்கம் மற்றும் இடது  பக்கத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று  மொழிகளில் ரயில் நிலையத்தின் பெயர் எழுதப்பட்டிருந்தது.

சமீபத்தில் நடந்த கட்டுமானப் பணிக்குப்பின் முகப்பு  பக்கத்தில் தமிழிலும்,, வலது பக்கத்தில் ஆங்கிலத்திலும், இடது புறத்தில் இந்தியிலும் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதில் இடது புறத்தில் வைக்கப்பட்டுள்ள இந்தி பெயர் பலகையை மட்டும் படம்பிடித்து, தமிழ் பெயர் பலகை அகற்றப்பட்டதாக தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.

வாசகர்களின் புரிதலுக்காகாக ஈரோடு ரயில் நிலையத்தின்பழையப் புகைப்படத்தையும், புதியப் புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Left: New Photo, Right: Old Photo

Conclusion

ஈரோடு ரயில் நிலையத்தில் தமிழ் பெயர் பலகை நீக்கப்பட்டு, இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டதாக பரப்பப்படும் தகவல் தவறான ஒன்று என்பதை உரிய ஆதாரத்துடன் தெளிவாக விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Twitter Profile: https://twitter.com/gokhuls/status/1360408859911725061

The Hindu: https://www.thehindu.com/news/cities/Coimbatore/works-at-erode-railway-station-to-be-completed-on-time/article33612584.ece

Youtube: https://www.youtube.com/watch?v=x46wUsB9Y7A&t=2s


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular