ஹெச்.ராஜா பிறந்தது வட இந்தியா. பிழைப்புக்காக தமிழகத்தில் குடியேறியவர் என்று விக்கிபீடியாவில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படம் தவறானதாகும்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் முடிவினை நெருங்கி வருகின்றது. வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள், இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், பாஜக-அதிமுக கூட்டணி சார்பில் காரைக்குடி தொகுதியில் களம் காண்கிறார் பாஜகவின் ஹெ.ராஜா. அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வாடிக்கை.
இச்சூழ்நிலையில், ஹெச்.ராஜா பிறப்பால் ஒரு வட இந்தியர். பின்னர், பிழைப்புக்காக தமிழகத்தில் குடியேறியவர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் இதெல்லாம் தவறுங்க என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. விக்கிபீடியா இணையதளம் அந்த தகவலை வெளியிட்டுள்ளதாக அப்புகைப்படத்தில் காணப்படுகிறது.

Archived Link: https://archive.ph/QQeDG
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
ஹெச்.ராஜா பிறப்பால் வட இந்தியர்; பிழைப்புக்காக தமிழகம் வந்தவர் என்று விக்கிபீடியா பதிவிட்டதாகப் பரவிய செய்தி உண்மையா என்பதை அறிய அதுகுறித்து விக்கிபீடியா பக்கத்தில் ஆய்வு செய்தோம்.
உண்மையில், விக்கிபீடியா பக்கத்தில் ஹெ.ராஜா, தஞ்சாவூர் மாவட்டம், மெலட்டூரில் பிறந்தவர் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஹெச்.ராஜாவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக இதனை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

Archived Link: https://archive.ph/Kfqud
மேலும், விக்கிபீடியா பக்கத்தில் பதிவேற்றப்படாத வார்த்தைகளை குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் எடிட் செய்து உருவாக்கியிருப்பதும் நமக்குத் தெரிய வந்தது.
Conclusion:
ஹெ.ராஜா வட இந்தியர்; பிழைப்பிற்காக தமிழகம் வந்தவர் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources:
Wikipedia: https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)