வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact CheckPoliticsஜெயலலிதா அவர்களை முட்டிய யானை கொல்லப்பட்டதா?

ஜெயலலிதா அவர்களை முட்டிய யானை கொல்லப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை  முட்டியதால்  யானைக்குட்டி ஒன்று கொல்லப்பட்டதாக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஜெயலலிதா குறித்து பரவும் பதிவு

Fact Check/ Verification

சமீபத்தில் ஸ்டாலின் அவர்கள் நடத்திய கிராமசபை கூட்டத்தில் பெண் ஒருவர் கேள்வி கேட்டதால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி கேட்டப் பெண் அதிமுக அமைச்சர் வேலுமணியைச் சார்ந்தவர் என்று கூறப்பட்டது.

இச்சம்பவமானது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய செய்திப் பொருளாக மாறியது. சமூக ஊடகங்களில் பலர் இச்செய்தியை அடிப்படையாக வைத்து திமுகவையும், அக்கட்சியின் தலைவரான ஸ்டாலின் அவர்களையும் தாக்கி கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இக்கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பலர் மறந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து பல பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதில் ஒன்றாக ஜெயலலிதா அவர்கள் தன்னை முட்டிய யானைக் குட்டியை ஒரு வாரத்திற்குள் கொன்றதாகக் கூறி பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

https://www.facebook.com/kantha.samy.90410/posts/2772565653016442
https://www.facebook.com/srinivasan.arumugasamy/posts/3719917618030035

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இப்பதிவின் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை குறித்து அறிய இப்பதிவு குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமூக வலைத்தளங்களில் கூறப்படுவதுபோல் உண்மையிலேயே ஜெயலலிதா அவர்களால் குட்டி யானை கொல்லப்பட்டதா என்பதை அறிய இச்சம்பவங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்தோம்.

முதலில் யானைக் குட்டி ஜெயலலிதாவை முட்டிய சம்பவம் எப்போது  நடைப்பெற்றது என்பது குறித்து தேடினோம். இச்சம்பவமானது ஜூலை 30, 2013 அன்று நடைப்பெற்றதாக NDTV-யில் செய்தி வெளியிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

ஜெயலலிதா குறித்து NDTV-யில் வந்தச் செய்தி
Source: NDTV

இதன்பின் ஜெயலலிதா அவர்களை முட்டிய யானையின் நிலை குறித்து அறிய “ஜெயலலிதாவை முட்டிய யானை” என்ற கீவேர்டைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.

அவ்வாறு தேடியதில் அச்சம்பவம் முடிந்தபின் அந்த யானைக் குட்டிக்கு ஜெயலலிதா அவர்கள் காவேரி என்று பெயரிட்டதாகவும், அந்த யானைக் குட்டி உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால்  கடந்த ஆகஸ்ட் 4, 2014 அன்று உயிரிழந்ததாக ஒன் இந்தியா செய்தி வெளியிட்டிருந்தை நம்மால் அறிய முடிந்தது.

ஜெயலலிதா குறித்து ஒன் இந்தியாவில் வந்தச் செய்தி
Source: One India

காவேரி யானைக் குட்டியானது ஜெயலலிதா அவர்களை முட்டி ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பிறகே உயிரிழந்துள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பதிவில் ஜெயலலிதா அவர்களை முட்டி ஒரு வாரத்திற்குள் அது கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பதிவு முற்றிலும் பொய்யானது என்பதை நம்மால் உணர முடிகிறது.

Conclusion

ஜெயலலிதா அவர்களை  முட்டியதால்  யானைக்குட்டி கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பதிவு முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/kantha.samy.90410/posts/2772565653016442

Facebook Profile: https://www.facebook.com/mahendran.dmk.71/posts/418981116183261

NDTV: https://www.ndtv.com/south/when-jayalalithaa-got-a-jumbo-push-530009

Facebook Profile: https://www.facebook.com/srinivasan.arumugasamy/posts/3719917618030035

OneIndia: https://tamil.oneindia.com/news/tamilnadu/three-year-old-female-elephant-dies-207674.html


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular