வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024
வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024

HomeFact Checkவைரலாகும் ‘லுங்கி கேர்ள்ஸ்’ புகைப்படத்தில் இருப்பது கேரள மாணவிகளா?

வைரலாகும் ‘லுங்கி கேர்ள்ஸ்’ புகைப்படத்தில் இருப்பது கேரள மாணவிகளா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

கேரள மாணவிகள் என்கிற செய்தியைத் தாங்கி, இளம்பெண்கள் சிலர் குழுவாக லுங்கி அணிந்து நிற்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. கல்லூரியில் ஜீன்ஸ் அணிய தடைவிதிக்கப்பட்டதால், இப்பெண்கள் லுங்கி அணிந்து அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக புகைப்படத்தை தொடர்ந்து வைரல் வாசகம் ஒன்றும் பரவி வருகின்றது.

வைரலாகும் புகைப்படம்
வைரலாகும் செய்தி

Fact Check/Verification:

கேரளாவின் கல்வி நிறுவனம் ஒன்று, மாணவிகள் கல்லூரிக்கு ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது என்று தடை விதித்துள்ளதாகவும், அத்தடையை எதிர்த்து மாணவிகள் சிலர் லுங்கி அணிந்து தங்களது எதிர்ப்பினை பதிவு செய்துள்ளதாகவும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Source: Twitter

அப்புகைப்படமும், அதனைத் தொடர்ந்து பரப்பப்படும் கல்வி நிறுவனம் குறித்த செய்தியும் உண்மையா என்கிற கேள்விக்கு விடை காண, இச்செய்தியின் உண்மைத்தன்மை குறித்து நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மையும், பின்னணியும்:

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த செய்தியின் உண்மைத்தன்மை குறித்து அறிய, இது குறித்த செய்திகள் ஏதேனும் ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என்பதை முதலில் ஆராய்ந்தோம்.

அதன்படி, அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து பார்த்தபோது, இந்த புகைப்படம் 2015ம் ஆண்டு, ஆகஸ்டு மாதமே சமூக வலைத்தளங்களில் பரவியது தெரிய வந்தது. 2016ம் ஆண்டும் இந்த புகைப்படம் மீண்டும் வைரலாகியதும் நமக்கு தெரிய வந்தது.

https://www.facebook.com/photo/?fbid=973432692764306&set=a.522634294510817

ஆனால், அப்புகைப்படம் குறித்த செய்திதான் வேறானது. 2015ம் ஆண்டு வெளிவந்த நடிகர் மகேஷ் பாபுவின் ‘ஸ்ரீமந்துடு’ படத்தில் அவர் லுங்கி அணிந்து வரும் காட்சியை ரீ-க்ரியேட் செய்வது போல அமெரிக்காவில் வசிக்கும் மகேஷ் பாபுவின் ரசிகைகள் சிலர் லுங்கி அணிந்து புகைப்படம் வெளியிட்டுருப்பதாக சமூக வலைத்தளங்களில் விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

மகேஷ் பாபு
Source: Google
Source: Twitter

இதே புகைப்படம் 2016ம் ஆண்டு மீண்டும் வைரலான போது, இந்த விளக்கத்தை ஜீ நியூஸ் ஊடகம் செய்தியாக வெளியிட்டுள்ளது நமக்கு தெரிய வந்தது. இன்னும் பிற தளங்களும் இதற்கான உண்மை அறியும் சோதனை விளக்கத்தை வெளியிட்டுள்ளன என்பதை நாம் காண முடிந்தது.

லுங்கி கேர்ள்ஸ்
Source: Google Search

தற்போது, மீண்டும் இந்த புகைப்படம், கேரள கல்லூரி மாணவிகள் சிலர், கல்லூரி ஒன்றில் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லுங்கி அணிந்து போராட்டம் நடத்துவதாக பொய்யான செய்தியுடன் 2015 மற்றும் 2016ம் ஆண்டு போலவே சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

conclusion:

நம்முடைய விரிவான ஆய்விற்கு பின்னர் தெளிவாகத் தெரிவது என்னவென்றால், கேரள மாணவிகள் ஜீன்ஸ் அணியத் தடை என்பதை எதிர்த்து லுங்கி அணிந்து போராட்டம் என்று பரவும் செய்தியில் துளியும் உண்மையில்லை. புகைப்படம் மட்டுமே உண்மை; அப்புகைப்படத்தில் இருப்பவர்கள் நடிகர் மகேஷ் பாபுவின் அமெரிக்க ரசிகைகள் என்பதும் தெரிய வருகின்றது.

Result: False connection

Our sources:

Twitter: https://twitter.com/FrustIndian/status/739821784862580736?s=20

Zee news: https://zeenews.india.com/news/india/kerala-lungi-girls-viral-picture-news-is-fake-you-will-be-shocked-to-know-the-truth-behind-it_1892479.html

Telugu people news: https://www.telugupeople.com/news/article_00098921_Pic_TalkUSA_girls_Lungi_tribute_to_Srimanthudu.asp

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular