வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 19, 2024

HomeFact Checkராகுல் காந்தியின் காலில் விழும் 92 வயதான மோதிலால் வோரா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

ராகுல் காந்தியின் காலில் விழும் 92 வயதான மோதிலால் வோரா என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தியின் காலில் அக்கட்சியின் பொருளாளராக பதவி வகித்தவரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான மோதிலால் வோரா விழுந்து வணங்கியதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ராகுல்
Source: Facebook

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொருளாளராக பதவி வகித்தவருமானவர் மறைந்த மோதிலால் வோரா.

மத்திய பிரதேச முதல்வர், உத்திரபிரதேச மாநில ஆளுநர் என்று பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார் இவர். கடந்த 2020, டிசம்பரில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் இவர்.

இந்நிலையில், “மோதிலால் வோரா (92) ராகுல் காந்தியின்(51) காலில் விழுகிறார். மன்மோகன் சிங், (88) பூங்கொத்தை பிடித்து நிற்கிறார். இத்தகைய அடிமைத்தனமாக இருக்கக்கூடியவர்கள் மட்டுமே காங்கிரஸில் பிழைப்பார்கள். காங்கிரஸின் அனைத்து அடிமைகளும் தொபக்கடீர் ன்னு காலில் விழ தயாராக இருக்க வேண்டும்.” என்கிற வாசகங்களுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ராகுல்
Source: Facebook

Facebook Link

ராகுல்
Source: Facebook

Facebook Link

ராகுல்
Source: Facebook

Facebook Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification:

ராகுல் காந்தியின் காலில் விழுந்து வணங்கிய 92 வயதான மோதிலால் வோரா என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

குறிப்பிட்ட அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த 2018ம் ஆண்டில் இருந்தே பல மொழிகளில் அப்புகைப்படம் வைரலாகி வந்தது தெரிய வந்தது.

மேலும், இதுகுறித்து ஆய்வு நடத்திய போது குறிப்பிட்ட புகைப்படத்தில் ராகுல் காந்தியின் காலில் விழ முயற்சிப்பது போன்று இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.எஸ்.சிங் டேவ்.

2018ம் ஆண்டு குறிப்பிட்ட அப்புகைப்படம் வைரலாகியபோதே முன்னணி இதழுக்கு விளக்கமளித்துள்ளார் டேவ். முன்னாள் பிரதமர் மன்மோகன் கையில் இருந்த பூங்கொத்தில் இருந்து வண்ண நூல் கீழே விழுந்ததாகவும் அதனை எடுக்கத் தான் குனிந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த உண்மையறியும் சோதனையை நியூஸ்செக்கர் இந்தியில் 2019 ஆம் ஆண்டே நாங்கள் வெளியிட்டுள்ளோம். எனவே, குறிப்பிட்ட அப்புகைப்படத்தில் இருப்பது மோதிலால் வோரா அல்ல; டி.எஸ்.சிங் டேவ் என்பது இதன்மூலமாகத் தெளிவாகத் தெரிகிறது.

Conclusion:

ராகுல் காந்தியின் காலில் விழுந்து வணங்கிய 92 வயதான மோதிலால் வோரா என்று பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/Incorrect Content

Our Sources:

News Checker Hindi: https://newschecker.in/hi/fact-check-hi/motilal-bora-did-not-touch-rahul-gandhis-feet-the-old-picture-is-being-shared-incorrectly

India Today: https://www.indiatoday.in/fact-check/story/fact-check-did-senior-congress-leader-ts-singh-deo-touch-rahul-gandhi-feet-1413347-2018-12-20

Hindu Tamil: https://www.hindutamil.in/news/india/614101-motilal-vora-1.html

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular