வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2021
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 24, 2021
HomeFact Checksரஜினி மக்கள் மன்ற செயலாளர் சீனிவாசன் திமுகவில் இணையவில்லை!

ரஜினி மக்கள் மன்ற செயலாளர் சீனிவாசன் திமுகவில் இணையவில்லை!

ரஜினி மக்கள் மன்றத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளரான கே.வி.எஸ்.சீனிவாசன் இன்று காலை திமுகவில் இணைந்ததாக செய்தி ஒன்று பரவியது.

Source: Whatsapp

Fact Check/ Verification:

ரஜினிகாந்த், கட்சி துவங்குவதாக அறிவித்தது துவங்கி, கட்சி துவங்கும் எண்ணத்தை கைவிட்ட பிறகும் கூட அவரையும் அவரது ரசிகர்கள், நலம் விரும்பிகளையும் சுற்றிச் சுழலும் பொய்ச்செய்திகளுக்குப் பஞ்சமில்லை.

அவ்வகையில், தற்போது அவரது கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றச் செயலாளரான கே.வி.எஸ்.சீனிவாசன் என்பவர் இன்று காலை (17/01/2021) திமுகவின் இணைந்ததாக புகைப்படம் ஒன்று பரவியது.

Source: Facebook

மேலும், சில முன்னணி செய்தி நிறுவனங்களும் இதுகுறித்த செய்தியை வெளியிட்டிருந்தது.

ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் இச்செய்தியின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்:

குறிப்பிட்ட அச்செய்தி குறித்து திரு. கே.வி.எஸ் சீனிவாசன் அவர்களே தனது பேஸ்புக் பக்கத்தில் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுகவில் இணையவில்லை
பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். நான் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக தொடர்ந்து செயல்படுவேன். நான் திமுகவில் இணைந்ததாக செய்தி தொலைக்காட்சிகளில் தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். நான் எப்போதும் தலைவரின் வழியில் எனது பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். எனவே, திமுகவில் இணைந்ததாக வெளியாகும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம்.”
என்று தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/photo?fbid=3605888586133004&set=a.206091836112713

Source: Facebook

எனவே, ஊடகங்களில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பது போல ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் திமுகவில் இணையவில்லை என்பது தெளிவாகிறது.

Conclusion:

ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரான கே.வி.எஸ்.சீனிவாசன் என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவில்லை என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources:

KVS Srinivasan: https://www.facebook.com/photo?fbid=3605888586133004&set=a.206091836112713

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular