வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkபிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட புதிய விமானம் இதுவா?

பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட புதிய விமானம் இதுவா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்டப் புதிய விமானம் என்று சில புகைப்படங்கள் இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றன.

பிரதமரின் விமானம் என்று பரப்பப்பட்ட படம்
பிரதமரின் விமானம் என்று வைரலானப் படம்.

Fact Check/Verification

பிரதமர் உட்பட முக்கிய நபர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக போயிங் 777 ரக விமானங்கள் நம் இந்திய அரசால் வாங்கப்பட்டுள்ளது.

இதை பிரதமரைத் தவிர்த்து, குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

இச்சேவைகளுக்கு தற்போது வரை போயிங் 747 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பதிலாகவே புதிய ரக விமானங்கள் வாங்கப்பட்டுள்ளது.

இதுக்குறித்த விரிவாக சமயம் தமிழில் செய்தி வெளியாகி இருந்தது.

பிரதமர் மோடிக்காக வாங்கப்பட்ட விமானம் குறித்து வந்தச் செய்தி.
பிரதமருக்காக வாங்கப்பட்ட விமானம் குறித்தச் செய்தி.

இவ்விமானங்கள் இவ்வருட ஜூலை மாதத்தில் பயன்பாட்டிற்கு வரவிருந்தது. ஆனால் கொரானாக் காரணமாக இந்நிகழ்வுத் தள்ளிச் சென்றது. தற்போது  இவ்விமானம் செப்டம்பர் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.

தற்போது சமூக வலைத்தளங்களில் 747 போயிங் விமானத்தின் உட்புறத்தோற்றம் என்று புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதை பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இச்செய்தியின் உண்மைத் தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் சார்பில் ஆராய்ந்தோம்.

உண்மை என்ன?

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் செய்தப்பின் இதுக்குறித்த உண்மைகளை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில், சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படமானது  பிரதமர் நரேந்திர மோடிக்காக உருவாக்கப்படும் 747 போயிங் ரக விமானத்தின் புகைப்படமே கிடையாது. அது போயிங் 787 ஜெட்லைனர் ரக விமானத்தின் புகைப்படமாகும்.

தி சன் எனும் இணையத்தளத்தில் மிகவும் விலையுயர்ந்த சொகுசு விமானங்கள் குறித்து ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஏவியேஷன் கம்பெனி டீர்ஜெட் கம்பெனிக்கு சொந்தமான போயிங் 787 ஜெட்லைனர்விமானத்தைக் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விமானம் குறித்த சன் இணையத்தளத்தில் வந்தச் செய்தி.
தி சன் இணையத் தளத்தின் செய்தி.

இவ்வகை விமானம் உலகில் ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்கட்டுரையில் வெளிவந்த புகைப்படமும், வைரலான செய்தியில் உள்ளப் புகைப்படமும் ஒன்றுதான் என்பதைக் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

நம் விரிவான விசாரணைக்குப்பின் வைரலான செய்தியில் வந்தப் புகைப்படம், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்காக வாங்கப்பட்டிருக்கும் விமானத்தின் புகைப்படம் இல்லை என்று நமக்குத் தெளிவாகிறது.

Result: False/Fabricated


Our Sources

Twitter Profile: https://twitter.com/MahesDollar/status/1289903700501098502

Twitter Profile: https://twitter.com/PARITHITAMIL/status/1289579513890746370

Tamil Samayam: https://tamil.samayam.com/automobiles/news/custom-made-b777-planes-will-be-used-to-fly-pm-narendra-modi-from-july-next-year/articleshow/72038692.cms

The Sun: https://www.thesun.co.uk/news/7063810/luxury-private-super-planes/

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular