புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024

HomeFact Checkலவ் ஜிஹாத் தடை சட்டம் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசு கலைக்கப்பட்டதா?

லவ் ஜிஹாத் தடை சட்டம் காரணமாக கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றிலிருந்த சிசு கலைக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

லவ் ஜிஹாத் தடைச் சட்டத்தில் கைதான மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் கரு, விஷ ஊசி மூலம் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் விக்ரமன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

லவ் ஜிஹாத் சட்டம் குறித்து பரவும் பதிவு
Source: Twitter

Fact Check/ Verification

உத்திரப் பிரதேசத்தில் லவ் ஜிஹாத் காரணமாக கட்டாய மதமாற்றம் செய்வதைத் தடை செய்யும் விதமாக கடந்த மாதம் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

யாரேனும் கட்டாயப்படுத்தியோ அல்லது நேர்மையற்ற முறையிலோ மத மாற்றம் செய்தால், அவர்களுக்கு இச்சட்டத்தின் அடிப்படையில் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர முடியும்.

இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில் சமீபத்தில் உத்திரப் பிரதேசத்தின்  மொரதாபாத் போலீசாரால்  பிங்கி என்ற இந்து  பெண்ணும், இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த  ரஷீத் எனும் அவரது  கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்தப் பெண் கர்ப்பமாக இருந்ததாகவும், அவர் வயிற்றில் இருந்த சிசுவைக் கொல்ல அப்பெண்ணுக்கு விஷ ஊசித் தரப்பட்டதாகவும் கூறி, இச்சம்பவத்தைக் கண்டித்து விக்ரமன் அவர்கள் பதிவு ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தலங்களில் இத்தகவலை மேலும் பலரும் பகிர்ந்துள்ளனர்.

சமூக வலைத்தளம் மூலமாக விக்ரமன் அவர்கள் பகிர்ந்த இத்தகவலின் உண்மைத்தனமைக் குறித்து அறிய, இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

லவ் ஜிஹாத் தடைச் சட்டத்தில் கைதான மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் கரு, விஷ ஊசி மூலம் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் விக்ரமன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டின் பின்னணிக் குறித்து அறிய, இச்செய்திக் குறித்து விரிவாகத் தேடினோம்.  

நம் தேடலில் இங்கிலாந்தைச் சேர்ந்த டெலிகிராஃப் இணையத்தளத்தில் இவ்வாறு ஒரு செய்தி முதன்முதலில் வந்திருப்பதை அறிய முடிந்தது.

நம் இச்செய்தி குறித்து மேலும் தேடுகையில், விஷ ஊசி போட்டு பிங்கியின்  கரு கலைக்கப்பட்டதாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வரும் தகவல் பொய்யானது என்று உத்திரப் பிரதேச காவல்துறையினர் மறுத்துள்ளதாக தி இந்து மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தை நம்மால் காண முடிந்தது.

பிங்கி வயிறு வலி என்று கூறியதால் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது அவர் நலமாக உள்ளதாகவும் மாவட்ட தகுதிகாண் அதிகாரித்(District Probation Officer) தரப்பில் பதில் அளிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.

லவ் ஜிஹாத் தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த செய்தி
Source: Indian Express/Screen shot

இதன்படி பார்க்கையில், லவ் ஜிஹாத் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு விஷ ஊசி மூலம் கருக்கலைப்பு செய்யப்பட்டது என்று பரவும் செய்தி தவறானது என்பது தெளிவாகிறது.

 Conclusion

லவ் ஜிஹாத் தடைச் சட்டத்தில் கைதான மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் கரு, விஷ ஊசி மூலம் கலைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் விக்ரமன் அவர்கள் சாட்டியுள்ள குற்றச்சாட்டானது ஆதாரமற்றது என்பதனை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் தெளிவாக விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Mr.Vikraman: https://twitter.com/RVikraman/status/1338078525367091200/photo/1

Telegraph: https://www.telegraph.co.uk/news/2020/12/12/first-woman-detained-indias-controversial-love-jihad-laws-forced/

The Hindu: https://www.thehindu.com/news/national/other-states/wife-of-arrested-muslim-man-did-not-have-a-miscarriage-claim-up-officials/article33321282.ece

The Indian Express: https://indianexpress.com/article/india/up-anti-conversion-law-arrest-22-yr-old-pregnant-woman-in-protection-home-fine-no-miscarriage-says-official-7103671/

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular