புதன்கிழமை, செப்டம்பர் 22, 2021
புதன்கிழமை, செப்டம்பர் 22, 2021
HomeFact Checksஇந்த அறிக்கை ரஜினிகாந்தால் விடப்பட்டதா?

இந்த அறிக்கை ரஜினிகாந்தால் விடப்பட்டதா?

பாஜகவும் அதிமுகவும் தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் அவர்கள் அறிக்கை விடுத்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ரஜினிகாந்தின் அறிக்கை என்று பரவும் பதிவு

Fact Check/ Verification

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவித்தார். இதன்பின் ரஜினிகாந்த் மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

கர்நாடகாவில் பிறந்த இவர் எவ்வாறு தமிழகத்தை ஆள முடியும், பாஜவின் கைக்கூலி, பாஜகவின் ரகசிய முதல்வர் வேட்பாளர் என தொடர்ந்து பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், கட்சி தொடங்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

இம்முடிவை ரஜினிகாந்த் ரசிகர்கள் தவிர்த்து, மற்ற பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும் பொது மக்களும் வரவேற்றனர்.

இந்நிலையில் தற்போது, “பாஜகவும் அதிமுகவும் எக்காரணம் கொண்டும் எனது பெயரையோ, எனது புகைப்படங்களையோ தேர்தலில் பயன்படுத்தக் கூடாது”  என்று ரஜினிகாந்த அவர்கள் அறிக்கை ஒன்றை விடுத்ததாக சன் நியூஸின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

https://www.facebook.com/gnanavel.gnanavel.96155669/posts/445081799842902
https://www.facebook.com/paul.raj.169/posts/3463471573750089

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்தப் புகைப்படச் செய்தி உண்மையானதா என்பதை அறிய, இச்செய்திக் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

பாஜகவும் அதிமுகவும் எக்காரணம் கொண்டும் எனது பெயரையோ, எனது புகைப்படங்களையோ தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த அறிக்கை விடுத்ததாக செய்தி பரவியதைத் தொடர்ந்து இவ்வாறு ஒரு செய்தி மற்ற ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என்பதை முதலில் தேடினோம்.

அவ்வாறு தேடியதில் இவ்வாறு ஒரு அறிக்கையை ரஜினிகாந்த் அவர்கள் விடுத்ததாக எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இதன்பின் ஆய்வின் அடுத்தக் கட்டமாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியை ரிவர்ஸ் சர்ச் முறையில் ஆய்வு செய்தோம். அவ்வாறு செய்ததில் இந்தப் புகைப்படச் செய்தியின் பின்புலத்தில் இருந்த உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

உண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியானது எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியாகும்.

கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி ரஜினிகாந்த் அவர்கள் கட்சி தொடங்கப்போவதில்லை என்று அறிவித்தபோது, அச்செய்தியை சன் நியூஸ் புகைப்படச் செய்தியாக வெளியிட்டிருந்தது.

Source: Twitter

இந்தப் புகைப்படச் செய்தியை எடிட் செய்து,  “பாஜகவும் அதிமுகவும் எக்காரணம் கொண்டும் எனது பெயரையோ, எனது புகைப்படங்களையோ தேர்தலில் பயன்படுத்தக் கூடாது”  என்று ரஜினிகாந்த் அவர்கள் கூறியதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரப்பப்படுகிறது.

வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படச் செய்தியையும், எடிட் செய்யப்பட்டப் புகைப்படச் செய்தியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Conclusion

பாஜகவும் அதிமுகவும் தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் அறிக்கை விடுத்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படச் செய்தியானது பொய்யானது என்பதையும் அது எடிட் செய்யப்பட்டது என்பதையும் உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Facebook Profile: https://www.facebook.com/gnanavel.gnanavel.96155669/posts/445081799842902

Facebook Profile: https://www.facebook.com/paul.raj.169/posts/3463471573750089

Sun News: https://twitter.com/sunnewstamil/status/1343808189687468032


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular