இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

பெரம்பலூரில் டைனோசர் முட்டை கிடைத்ததாக வதந்தி
பெரம்பலூரில் டைனோசர் முட்டைக் கிடைத்ததாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

இவர் அனீஸ் கண்மணி ஜாய் ஐஏஎஸ் அல்ல
குடகு மக்கள் மாவட்டஆட்சியரின் காலில் விழுந்து வணங்குவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

குருமூர்த்தி ஓ.பி.சி. இட ஒதுக்கீடுக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தாரா?
ஆடிட்டர் குருமூர்த்தி அவர்கள் ஓ.பி.சி. இட ஒதுக்கீடு மறுப்புக் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்.

வைரலாகும் ‘லுங்கி கேர்ள்ஸ்’ புகைப்படத்தில் இருப்பது கேரள மாணவிகளா?
கேரள மாநிலத்தின் கல்லூரி ஒன்றில் ஜீன்ஸ் அணியத் தடை விதிக்கப்பட்டதால்,
கல்லூரி மாணவிகள் லுங்கி அணிந்து அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக
வைரலாகும் புகைப்படச் செய்தியில் உண்மையில்லை.

கொரோனாவை அழிக்குமாஅமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் தொங்கும் அட்டை?
அமைச்சர் செல்லூர் ராஜூ கழுத்தில் அணிந்துள்ள ‘வைரஸ் ஷட் அவுட்’ என்னும்
அட்டை கோவிட் 19ஐ உண்டாக்கும் கொரோனா வைரஸை அழிக்கும் என்பதற்கு நிரூபணம்
இல்லை.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)