இந்த வாரம் நியூஸ் செக்கரில் தமிழக அரசியலில் கட்டவிழ்த்தப்பட்ட பொய் செய்திகளை முழுமையாக ஆராய்ந்து அவற்றின் உண்மைத்தன்மையை ஆதாரத்துடன் விளக்கியிருந்தோம்.
இவ்வாரம் பிரசுரமான கட்டுரைகளில் சிறந்த ஐந்து கட்டுரைகளை கீழே தந்துள்ளோம்.

வைரலானத் தம்பதிகள் 7 மாதங்களில் பிறந்தவர்களா?
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் தம்பதிகள் 7 மாதங்களில் பிறந்தவர்கள் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானத் தகவலாகும்.

சூர்யாவை அடித்தால் ஒரு லட்சம் தருவதாக வதந்தி
நடிகர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக அர்ஜூன் சம்பத் அறிவித்தார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரப்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் பொய்யானத் தகவலாகும்.

அதிமுக அரசால் தஞ்சையில் கோயில் இடிக்கப்பட்டதா?
அதிமுக அரசு இந்து மதத்திற்கு எதிராக மிகப்பெரிய சிவலிங்கத்தை உடைய கோயிலை அராஜகமாக இடிப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் தவறானத் தகவலாகும்.

‘ரத்தம் சொட்ட நிற்கிறார்கள்’ என்று அண்ணாமலை கூறினாரா?
பாஜகவினர் இரத்தம் சொட்டம் நிற்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்படுகிறது. ஆனால் அது முற்றிலும் தவறானத் தகவலாகும்.

ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுத்தால், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன் என்று அண்ணாமலை கூறியதாக வதந்தி
தனக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்று அண்ணாமலை கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் அது முற்றிலும் தவறானத் தகவலாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)