வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact Checkஉலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற...

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் அவர்களின் புகைப்படம் என்று புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் இதே தருணத்தில், ஹங்கேரியின் புட்டாபெஸ்டில்  உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியும் நடந்து அருகின்றது. இப்போட்டிகளில் 73 கிலோ பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் கலந்துக்கொண்டு தங்கம் வென்றார்.

இந்த செய்தியானது ஊடகங்களில் பெரும் செய்திப் பொருளானது பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் பிரியா மாலிக்கிற்கு  வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதேபோல் வெகு ஜன மக்களும் பிரியா மாலிக்கிற்கு தங்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த வாழ்த்து பதிவுகளில் பிரியா மாலிக் என்று குறிப்பிட்டு சில வீராங்கனைகளின் படங்களும் பகிரப்பட்டு வருகின்றது.

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள் - 1

Facebook Link | Archive Link

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று பகிரப்படும் மற்ற வீராங்கனைகளின் புகைப்படங்கள் - 2

Facebook Link | Archive Link

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படங்களின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படங்கள் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் என்று வீராங்கனைகள் சிலரின் படங்கள் வைராலனதைத் தொடர்ந்து உண்மையான பிரியா மாலிக் யார் என்பதை அறிய இதுக்குறித்து தேடினோம்.

நம் தேடலில் பிரியா மாலிக் தங்கம் வென்றது குறித்த தகவல்  மத்திய அரசின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

Archive Link

இதன்படி பார்க்கையில் சமூக வலைத்தளங்களில் பிரியா மாலிக் என்று பகிரப்படும் படங்களில் இருப்பவர்கள் பிரியா மாலிக் இல்லை என்பது நமக்கு தெளிவாகியது.

ஆயினும் சமூக வலைத்தளங்களில் பிரியா மாலிக் என்று குறிப்பிட்டு பரப்பப்படும் வீராங்கனைகள் யார் என்பது குறித்து தெளிவுப்படுத்த வேண்டியது அவசியமென்பதால் அவ்விருவர் குறித்து தேடினோம்.

சமூக வலைத்தளங்களில் பிரியா மாலிக் என்று குறிப்பிட்டு இருவரின் புகைப்படங்கள் பரப்பப்பப்படுகின்றது.

இதில் முதல் படத்தில் இருப்பவர் சோனம் மாலிக் ஆவார். இவர் ஹரியானாவைச் சேர்ந்தவராவார். இவர் நடந்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் மல்யுத்தப் போட்டியில் பங்குப்பெற உள்ளார்.

Archive Link

இரண்டாம் படத்தில் இருப்பவர் சாக்ஷி மாலிக், இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த  ஒலிம்பிக் போட்டியில் 58 எடை பிரிவு மல்யுத்தப் போட்டியில் பங்குபெற்று வெண்கலப் பதக்கம் வென்றவர்.

சாக்ஷி மாலிக்
Source: Times of India

Also Read: தமிழக அரசின் கோபுர சின்னம் மாற்றப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக நியூஸ் கார்டு வெளியிட்டதா சன் நியூஸ்?

Conclusion

உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பிரியா மாலிக் அவர்களின் புகைப்படம் என்று சமூக வலைத்தளங்களில் பரவும் வீராங்கனைகளின் புகைப்படங்களில் இருப்பவர்கள் பிரியா மாலிக் அல்ல என்பதையும், சரியான பிரியா மாலிக் யார் என்பதையும் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False Connection

Our Sources

My Gov India: https://twitter.com/mygovindia/status/1419190285452550147

She The People: https://twitter.com/SheThePeople/status/1418140937000153088

Times of India: https://timesofindia.indiatimes.com/topic/sakshi-malik


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular