வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024
வெள்ளிக்கிழமை, மார்ச் 29, 2024

HomeFact CheckPoliticsFact Check: டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றாரா நிதியமைச்சர் பழனிவேல்...

Fact Check: டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்றாரா நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்

Fact: இத்தகவலை கூறியது நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஆவார்

2023 -2024 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (20/03/2022) தாக்கல் செய்தார். இதில், கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் ₹50000 கோடி வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக  வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@PeriyarDravidam
டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக  வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@Schumy_Official
டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக  வைரலாகும் தகவல்
Screengrab from Twitter@Ashokmeesalur08

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா பாஜக ஹெச்.ராஜா?

Factcheck / Verification

டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் மேற்கண்ட கருத்தை கூறினாரா என்பதை ஆராய்ந்தோம். இதில் அமைச்சரின் முழு பட்ஜெட் உரையும் தந்தி தொலைக்காட்சி யூடியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. இந்த உரையில் எந்த ஒரு இடத்திலும் டாஸ்மாக வருமானம் குறித்து பிடிஆர் பேசி இருக்கவில்லை.

தொடர்ந்து தேடியதில் நிதியமைச்சரின் பட்ஜெட் உரை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அந்த உரையை முழுமையாக ஆராய்கையில், அதிலும் டாஸ்மாக் குறித்த தகவல் இடம்பெற்றிருக்கவில்லை.

Powered By EmbedPress

இதனையடுத்து நிதியமைச்சர் டாஸ்மாக் வருமானம் குறித்து பேசவில்லை என்பது உறுதியாகிய நிலையில், வேறு யாரேனும் இதுக்குறித்து பேசியுள்ளார்களா என தேடினோம். இதில் நிதித்துறை செயலாளர் முருகானந்தம் இந்த தகவலை கூறியுள்ளார் என்பதை அறிய முடிந்தது.

கடந்த நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் ₹45000 கோடி வருமானம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டில் ₹50000 கோடி வருமானம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது எனும் கருத்தை நிதியமைச்சர் கூறவில்லை, அதை நிதித்துறை செயலாளர்தான் கூறினார் என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியப்பின் வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்த ஆய்வை தொடங்கினோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் புதிய தலைமுறை இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் ஆராய்ந்தோம்.

இதில் புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே புதிய தலைமுறையின் சமூக ஊடகப் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம்.   

அவர், வைரலாகும் நியூஸ்கார்டை நாங்கள் பதிவிட்டது உண்மையே, ஆனால் அக்கருத்தை அமைச்சர் கூறவில்லை என அறிந்தப்பின் அதை நீக்கி விட்டோம்’ என்று பதிலளித்தார்.

Also Read: Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Conclusion

டாஸ்மாக் வருமானம் 50 ஆயிரம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாக வைரலாகும் தகவல் தவறானது என்பதும், இத்தகவலை உண்மையில் கூறியது நிதித்துறை செயலாளர் முருகானந்தம் என்பதும் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources

Tamilnadu Government Website
YouTube Video from Thanthi Tv, dated March 20, 2023
YouTube Video from News 18 Tamilnadu, dated March 20, 2023
Phone conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai, dated March 21, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular