Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Uncategorized @ta
கொரோனா வைரஸ் நாவல் இப்போது உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ளது. இந்த கொடிய வைரஸ், சீனாவின் வுஹான் மற்றும் பிற பகுதிகளில் மிக வேகமாக பரவியுள்ளது , இப்போது 70 க்கும் மேற்பட்ட நாடுகளை இந்த நோய் தாக்கி உள்ளது . இதற்கு இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல,நாட்டில் இதுவரை 29 நபர்களுக்கு இந்த நோய் பாசிட்டிவ் என்று அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்து உள்ளது . உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுகாதார அமைச்சகங்களுடன் நெருக்கமாகச் செயல்படுகின்றன; பாதிக்கப்படாத நாடுகளும் உலகளாவிய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. கொரோனா வைரஸின் காரணம், விளைவு, அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்துப் பல நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் தற்போது பல சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. இது எவ்வாறு பரவுகிறது, அதன் விளைவுகள் என்ன, இந்த வைரஸுக்கு இந்தியாவின் காலநிலை உகந்ததா இல்லையா என்பது பற்றியும், இந்த கொடிய மற்றும் ஆபத்தான வைரஸின் விளைவுகளைத் தூண்டுவதில் ஒரு வினையூக்கியாக செயல்படக்கூடிய காரணிகளைப் பற்றியும் இதுவரை நாம் அறிந்தவை இங்கே.
கொரோனா வைரஸ் என்றால் என்ன?
கொரோனா வைரஸ் (CoV) என்பது சுவாச வைரஸ் ஆகும், இது ஜலதோஷத்தை உள்ளடக்கிய வைரஸ்களின் தொடர்புடையது, மேலும் SARS (தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி) மற்றும் MERS ( சுவாச நோய்க்குறி) போன்ற வைரஸ்களும் இதில் அடங்கும் . சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட புதிய வைரஸுக்கு தற்காலிகமாக ‘2019-nCoV’ என்று பெயரிடப்பட்டது. உலக சுகாதார அமைப்பு சமீபத்திய ஆய்வின்படி, வைரஸ் ஜூனோடிக் ஆகும், எனவே பெரும்பாலும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் நடுவில் இந்த நோய் எளிதில் பரவும் . SARS-CoV முதன்முதலில் சிவெட் பூனைகளிலிருந்து மனிதர்களுக்கும், மெர்ஸ்-கோவி ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது. ஒரு நாவல் கொரோனா வைரஸ் (nCoV) மனிதர்களிடையே இதுவரை காணப்படாத புதிய வகை கரோனா தடம்
கொரோனா வைரஸின் அறிகுறி:
கொரோனா வைரஸின் காரணம் மற்றும் விளைவு இன்னும் ஆராய்ச்சியிலிருந்தாலும் ,இந்த வைரஸின் அறிகுறிகளைக் கண்டறிவது மிகவும் எளிது
1.காய்ச்சல்
2.இருமல் மற்றும் தும்மல்
3.மூச்சுத்திணறல்
4.சுவாசிப்பதில் சிரமம்
5.சுவாச நோய்த் தொற்றுகள்
6.நிமோனியா
7.தீவிர கடிய மூச்சியக்க கூட்டறிகுறி
8.சிறுநீரக பிரச்சனை
9.தலைவலி
நம்மால் இயன்ற தடுப்பு நடவடிக்கை :
இந்தியாவின் நிலையை மனதில் கொண்டு “வருமுன் காப்பதே சிறந்தது “என்ற சொற்றொடர் பொதுவில் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வின் அவசியத்தை சுருக்கமாகக் கூறுவது மட்டும் அல்லாமல் ,அறியப்படாத வைரஸ்களின் வழியாக ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் நமக்கு இன்னும் அறியப்படாதவை .
இந்தியா மற்றும் உலக அளவில் கொரோனா வைரஸை எதிர்த்து போராட உதவும் தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்போம் .
1.கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்
2.தும்மல் மற்றும் இருமல் வரும் நேரங்களில் கை குட்டையால் வாய்யை மூடிகொள்ளவும்
3.வைரஸ் ஜூனோடிக் என்பதால் விலங்குகளிடம் சற்று தள்ளி இருப்பது நல்லது
4.நன்றாக இறைச்சி மற்றும் முட்டை வகைகளை கழுவி சமைப்பது நல்லது
5.இருமல் ,தும்மல் அல்லது சுவாச பிரச்சினை உள்ளவரிடம் கை குலுக்கவோ அல்லது மிக நெருக்கமாக உரையாடுவதைத் தவிர்க்கவும் .
பாதிக்கப்பட்ட நாடுகள் :
இந்த வைரஸ் பல நாடுகளில் பரவி அதற்கான ஒரு தனி வழியை ஏற்படுத்தி உள்ளது . உலகெங்கிலும் உள்ள பத்திரிக்கையாளர்கள் தங்களால் முடிந்தவரை இந்த வைரஸ் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,இதில் மிகவும் பாதிப்பு அடைந்த நாடு சீனா ,அங்குக் கிட்டத்தட்ட 80,409 பேருக்கு இந்த நோய் தாக்கப்பட்டு அதில் 3000 மேற்பட்ட நபர்கள் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .குறிப்பாக வுஹானில் ஏற்பட்டுள்ள கிருமிநோய்[கிருமி நோய்] பரவலை ஹாங்காங் அவசரநிலையாக அறிவித்துள்ளது. .இத்தாலி ,தென்கொரியா ,ஈரான் ,அமெரிக்கா ,இந்தியா ,வடகொரியா ,பஹ்ரேன் ,தாய்லாந்து ,வியட்நாம் ,தைவான் ,சிங்கப்பூர் ,நேபால், ஜப்பான் மற்றும் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன .
கொரோனா வைரஸில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
கொரோனா வைரஸ் தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு உலக சுகாதார நிறுவனம் விரிவான பதிலை அளித்துள்ளது .
கொரோனா வைரஸ் பற்றிய கேள்வி பதில்கள் :
கொரோனா வைரஸ் ஒரு பெரிய வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது , ஒரு சாதாரண ஜலதோஷம் முதல் மெர்ஸ் (MERS ) மற்றும் சார்ஸ் (SARS ) போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் ,விரிவான விசாரணையில் SARS-CoV 2002 ஆம் ஆண்டில் சீனாவில் சிவெட் பூனைகளிலிருந்து மனிதர்களுக்கும், MERS-CoV சவுதி அரேபியாவில் ட்ரோமெடரி ஒட்டகங்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது என்று கண்டறியப்பட்டு உள்ளது .
(உங்கள் கோரிக்கைகளைச் சரிபார்க்கக் கருத்துத் தெரிவிக்க அல்லது புகார் அளிக்க 9999499044 என்ற எண் மூலம் வாட்ஸப்பில் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் ‘Contact Us’ பக்கத்தின் மூலமாக விண்ணப்பமும் பூர்த்தி செய்து எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.)
Ramkumar Kaliamurthy
November 26, 2022
Ramkumar Kaliamurthy
October 31, 2022
Ramkumar Kaliamurthy
August 13, 2022