சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024
சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024

HomeUncategorized @taசிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜின் குழந்தையா இது?

சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜின் குழந்தையா இது?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தை என கூறி, வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

சிரஞ்சீவி சார்ஜாவின் குழந்தை என்று பரவும் பதுவு
Source: YouTube/Screen shot

Fact Check/ Verification

கன்னட திரையுலகில் முன்னனி நாயகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் நடிகர் அர்ஜூன் அவர்களின் சகோதரி மகனாவார்.

இவரது மனைவி மேக்னாராஜும் ஒரு நடிகையே ஆவார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இதைத் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மேக்னா ராஜ் நடித்துள்ளார்.

அர்ஜூன் சார்ஜாவும் மேக்னா ராஜும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் ஆகி வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகி இருந்த நிலையில், யாரும்  எதிர்பாராதவிதமாக அர்ஜூன் சார்ஜா கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்நிகழ்வானது கன்னட மக்களிடையே மிகப்பெரியத் தாக்கத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அர்ஜூன் சார்ஜா இறக்கும்போது மேக்னா ராஜ் கருவுற்றிருந்தார்.  அவர் இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது.

தற்போது சமூக ஊடகங்களில்  சிரஞ்சீவி சார்ஜா, மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தை என கூறி ஒரு குழந்தையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வீடியோவில் இருக்கும் குழந்தை உண்மையிலேயே அர்ஜூன் சார்ஜா, மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தைதானா என்பது குறித்து அறிய, இவ்வீடியோ குறித்து நியூஸ் செக்கர் தமிழ் சார்பில் ஆராய முடிவு செய்தோம்.

உண்மையும் பின்னணியும்

சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் குழந்தை அர்ஜூன் சார்ஜா, மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தைதானா என்பது குறித்து அறிய,  இதுக்குறித்து தீவிரமாக ஆராய்ந்தோம்.

அவ்வாறு ஆராய்ந்ததில்,  மேக்னா ராஜ் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வைரலான குழந்தையின் படத்தை பதிவிட்டு, That’s a really cute baby… But sorry to disappoint you guys… It’s not junior C” என்று பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது.

Source: Instagram/ Screen shot

இதைத் தமிழில் மொழிப்பெயர்த்தால்,

இந்தக் குழந்தை மிகவும் அழகாக உள்ளது… ஆனால் உங்களை மகிழ்ச்சியை கெடுப்பதற்கு மன்னிக்கவும்…. இக்குழந்தை ஜூனியர் சிரஞ்சீவி அல்ல.”

என்பதே அர்த்தமாக வரும்.

இதன்படி பார்க்கையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவில் இருக்கும் குழந்தை சிரஞ்சீவி சார்ஜா, மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தை அல்ல என்பது நிரூபணமாகிறது.

 Conclusion

சமூக வலைத்தளங்களில்  பரப்படும் வீடியோவில் இருக்கும் குழந்தை மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் மேக்னா ராஜ் தம்பதிகளின் குழந்தை இல்லை என்பதை உரிய ஆதாரத்துடன்  தெளிவுப்படுத்தியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Youtube Channel: https://www.youtube.com/watch?v=AtVXHoaDOKc&feature=youtu.be

Youtube Channel: https://www.youtube.com/watch?v=i98P1Gkfr0U

Meghna Raj Instagram stories


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular