Claim: ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் ஏரியில் விழுந்து மரணம்
Fact: இத்தகவல் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவமாகும்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழர்களை காவல்துறையினர் விரட்டியபோது அதில் 5 தமிழர்கள் ஏரியில் விழுந்து உயிரிழப்பு என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”#சேலம் மாவட்டம் #கல்வராயன் மலை #கருமந்துறை என்ற பகுதி #அடியினர் என்ற கிராமம் சேர்ந்த தமிழர்கள் #ஆந்திர செம்மரகட்டவெட்ட போனதாகவும் அவர்களைகாவல்துறையினார் விரட்டியதால் ஐந்து தமிழர்கள் ஏரியில் விழுந்து உயிரிழப்பு, மீண்டும் அப்பாவி தமிழர்கள் மரணம் #திராவிடமாடல்அரசு” என்று இந்த வீடியோ பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பங்களாதேஷில் மதவெறியால் நடந்த கொடூரம் என்று பரவும் ஹத்ராஸ் வீடியோ!
Fact Check/Verification
ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற 5 தமிழர்கள் காவல்துறையினர் விரட்டியபோது ஏரியில் விழுந்து உயிரிழப்பு என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பிப்ரவரி 19, 2018ஆம் ஆண்டு “கடப்பா ஏரியில் மூழ்கி உயிரிழந்த 5 தமிழர்களின் உறவினர்கள் பேட்டி” என்று நியூஸ் 7 தமிழ் வெளியிட்டிருந்த வீடியோ செய்தி நமக்குக் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து, அச்சம்பவம் குறித்த வைரல் வீடியோ காட்சி கடந்த பிப்ரவரி 19, 2018 அன்று வெளியாகியுள்ள நியூஸ் 7 தமிழ் மதிய செய்தியில் இடம்பெற்றுள்ளது.
அச்சம்பவம் நடைபெற்ற ஆண்டு ஆட்சியில் இருந்தது அஇஅதிமுக தலைமையிலான அரசு. குறிப்பிட்ட செய்தி காட்சியே திமுக ஆட்சியில் தற்போது நடைபெற்றதாகப் பரவி வருகிறது.
Also Read: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவுக்கு தவெக தொண்டர்களுக்கு அனுமதி இலவசமா?
Conclusion
ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்ற 5 தமிழர்கள் காவல்துறையினர் விரட்டியபோது ஏரியில் விழுந்து உயிரிழப்பு என்று பரவும் வீடியோ கடந்த 2018ஆம் ஆண்டு செய்தி என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video from News7Tamil, Dated February 19, 2018
YouTube Video from News7Tamil, Dated February 19, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)