திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு ஒன்றிய அரசில் இருந்து வருகின்ற எந்த நிதியையும் கிடைக்க விடமாட்டேன்; கிடைக்காது என்பதாக பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சொல்லியதாகப் புகைப்படத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள அண்ணாமலை ஆகியோரின் புகைப்படத்துடன், அண்ணாமலை “ தி.மு.க ஆட்சியில் இருக்கும் வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன்”என்று தெரிவித்தார் என்கிற செய்தியுடன் நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சொன்னதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டோம்.
அதில், குறிப்பிட்ட நியூஸ் கார்டு வைரலாகும் செய்தி நிறுவனமாக கதிர் நியூஸ், வைரலாகும் கார்டு போலியாக உருவாக்கப்பட்டது என்பதை “பொய் பரப்புரையை நம்ப வேண்டாம் !” என்று தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கதிர் செய்திகளில், “1972ல் இருந்து காவிரி பிரச்சினையை வைத்து அரசியல் செய்து குளிர் காய்ந்த ஒரே கட்சி திமுக-அண்ணாமலை அதிரடி” என்கிற செய்தி வெளியான நியூஸ் கார்டு இவ்வாறு போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தமிழ்நாடு அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் பரவும் குறிப்பிட்ட செய்தி தவறானது என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பரவுகின்ற செய்தி மற்றும் நியூஸ் கார்டு போலியானது என்பது இதன்மூலமாக உறுதியாகிறது.
Conclusion:
திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை சொன்னதாகப் பரவுகின்ற புகைப்படச் செய்தி போலியானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
BJP Tamil Nadu:https://www.facebook.com/BJP4TamilNadu/photos/a.631042146945785/4052144701502162/
Kathir News: https://www.facebook.com/KathirNews/photos/a.622810831135278/4217532854996373/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)