பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, மாட்டுவண்டியில் வந்து போராட்டம் நடத்தினார் என்று புகைப்படத்தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 102 ரூபாயைத் தாண்டியுள்ளது. டீசல் விலையும் 92 ரூபாய்க்கு மேல் விற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், “பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்” என்கிற செய்தி, புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
மேலும், நியூஸ் 7 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போன்று அமைந்திருந்ததால் அத்தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலும் தேடினோம்.
அப்போது, குறிப்பிட்ட அப்புகைப்படம் தஞ்சையில் பாஜக சார்பில் நடைபெற்ற மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக அரசுக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை மாட்டு வண்டியில் வந்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மேலும், நியூஸ் 7 தொலைக்காட்சி குழுவில் பேசியபோது, அக்குறிப்பிட்ட செய்தி கார்டில், பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணாமலை என்று செய்தியை எடிட் செய்து மாற்றியுள்ளனர் என்பது உறுதியாகியது.

ORIGINAL CARD

FAKE CARD
Conclusion:
பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து மாட்டுவண்டியில் வந்து பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தியதாகப் பரவுகின்ற செய்தி தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை நம்பி அச்சப்பட வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Result: False
Our Sources:
News 18: https://fb.watch/7cIaoYdqR4/
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/photos/a.841936072535269/4876201789108657/
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)