Claim: பென்னிகுயிக்குக்கு சிலை வைத்ததை விமர்சித்தார் அண்ணாமலை.
Fact: வைரலாகும் இத்தகவல் தவறானதாகும். அண்ணாமலையும் கதிர் நியூஸ் தரப்பும் இத்தகவலை மறுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த சொத்துக்களை விற்று கட்டி முடித்தவர் பென்னி குயிக். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர் பிறந்த ஊரான இலண்டனில் தமிழக அரசு சார்பில் அவருக்கு சிலை வைக்கப்பட்டது.
இந்நிலையில், “நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அதிகாரிக்கு சிலை வைக்கிறது திமுக அரசு. சிலை வைக்கும் அளவுக்கு பென்னி குயிக் இந்துக்களுக்கு செய்த நன்மை என்ன?” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்டு ஒன்று திமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடும் ரிசர்வ் வங்கி என்னும் தகவல் உண்மையா?
Fact Check/Verification
பென்னிகுயிக்குக்கு சிலை வைத்ததை அண்ணாமலை விமர்சித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டில் ‘16/01/2022’ எனும் தேதி இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

அச்சமயத்திலேயே பென்னிகுயிக்குக்கு சிலை அமைக்கவிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஸ்டாலினின் இந்த முடிவுக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாக வைரலாகும் இந்த நியூஸ்கார்டு அச்சமயத்திலேயே பரவியுள்ளதை நம் ஆய்வில் காண முடிந்தது.
இதனையடுத்து கதிர் நியூஸ் தரப்பு இந்த நியூஸ்கார்டு போலியானது என்று ஜனவரி 16, 2022 அன்று அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்ததையும் காண முடிந்தது.
இதே தேதியில் இந்த மறுப்பு பதிவை அண்ணாமலை மறுபதிவு செய்து நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள அந்த தகவல் பொய்யானது என்று உறுதி செய்திருந்ததையும் நம்மால் காண முடிந்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுக்குகளுக்கு முன் பரவிய இந்த பொய் தகவல் மறுபடியும் சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து கதிர் நியூஸ் இத்தகவல் பொய்யானது என்று மீண்டும் அதன் எக்ஸ் பக்கத்தில் தெளிவு செய்துள்ளது.
Also Read: இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் மலேஷிய வீடியோ!
Conclusion
பென்னிகுயிக்குக்கு சிலை வைத்ததை அண்ணாமலை விமர்சித்ததாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Tweet from Kathir News, Dated Jan 16, 2022
Tweet from Annamalai, State President, BJP, Dated Jan 16, 2022
Tweet from Kathir News, Dated Jan 18, 2024
Tweet from @Jokerphoenix14, Dated Jan 20, 2022
Report from News 18 Tamil, Dated Jan 15, 2022
Self Analysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)