ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkஇந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் மலேஷிய வீடியோ!

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் மலேஷிய வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுகின்றது.

Fact: இத்தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு மலேஷியாவில் நிகழ்ந்ததாகும்.

“பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணியின் வேகம்என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ

X Link | Archived Link

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ

Archived Link

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராமர் படம் இடம்பெறும் புதிய 500 ரூபாய் நோட்டை வெளியிடும் ரிசர்வ் வங்கி என்னும் தகவல் உண்மையா?

Fact Check/Verification

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.

அதில், “Malaysia’s East Coast Railway began laying tracks” (மலேஷியன் கிழக்கு கடற்கரை ரயில்வே ரயில்பாதை அமைக்கின்றது) என்று குறிப்பிட்டு @TripInChina எனும் எக்ஸ் பக்கத்தில் இதே வீடியோ பதிவிடப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் சீன கட்டுமான் நிறுவனம் ஒன்று மலேஷியாவில் ரயில் பாதை ஒன்றை அமைப்பதாக China Xinhua News எனும் எக்ஸ் பக்கத்தில் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அப்படங்களில் காணப்பட்ட ரயில்பாதை அமைக்கும் இயந்திரம் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இயந்திரத்துடன் ஒத்துப்போவதை காண முடிந்தது.

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ
இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ

தொடர்ந்து ஆராய்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் இயந்திரத்தில் ‘MRL’ என்று குறிப்பிட்டு லோகோ ஒன்று இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அதுகுறித்து தேடுகையில் அது மலேஷியா ரயில் லிங்கின் லோகோ என தெரிய வந்தது.

இதனையடுத்து தேடுகையில் China Railway Engineering Corporation எனும் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் மலேஷியாவில் ரயில் பாதை அமைக்கப்படுவதாக புகைப்படங்களுடன் பதிவு ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அப்படங்களில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் அதே இயந்திரம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி காண்கையில் வைரலாகும் வீடியோ உண்மையில் மலேஷியாவில் எடுக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது

Also Read: ‘தற்காலிக ஓட்டுநர் அட்ராசிட்டிஸ்’ என்று பரவும் பழைய வீடியோ!

Conclusion

இந்தியாவில் வேகமாக ரயில் பாதை அமைக்கப்படுவதாக பரவும் வீடியோ தவறானதாகும். உண்மையில் அவ்வீடியோவானது மலேஷியாவில் எடுக்கப்பட்டதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் தெளிவுப்படுத்தியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from @TripInChina, Dated Jan 09, 2024
Tweet from @XHNews, Dated December 12, 2023
Tweet from @CRECofficial, Dated Dated December 21, 2023
Official website of Malaysia Rail Link

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular