Claim: கழுத்தில் சிலுவை அணிந்திருக்கும் அண்ணாமலை
Fact: வைரலாகும் அண்ணாமலை புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“ஏமிரா இதி ஆடு…நெத்தில பட்ட கழுத்துல கொட்ட சிலுவ வேற” என்று இந்த புகைப்படம் பரவுகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
அண்ணாமலை கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அப்போது, கடந்த ஜனவரி 24ஆம் தேதியன்று பாஜகவின் வினோஜ் பி செல்வம் என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அப்புகைப்படத்தில் அண்ணாமலை கழுத்தில் அணிந்திருக்கும் மாலையில் சிலுவை இடம்பெற்றிருக்கவில்லை. மேலும், என் மண் என் மக்கள் பக்கத்திலும் இப்புகைப்படம் ஷேர் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்தே அண்ணாமலை கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.
Also Read: ராமர் கோவில் திறப்பு விழாவில் பாஜகவினர் மது அருந்தியதாக பரவும் பழைய வீடியோ!
Conclusion
அண்ணாமலை கழுத்தில் சிலுவை அணிந்திருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
X post from, Vinoj P Selvam BJP, Dated January 24, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)