தமிழ்நாடு என்கிற பெயரை நிச்சல பிரதேசம், தஷிண பிரதேசம் என்று பாஜக மாற்றும் என்பதாக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இரு வேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் விரைவாக நெருங்கி வருகின்ற நிலையில் திமுக, அதிமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் மக்களைக் கவரும் வகையிலான வாக்குறுதிகளுடன் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அவ்வகையில், பாரதிய ஜனதா கட்சியும் நேற்று சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வைத்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வி,கே.சிங் ஆகியோர் மூலமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு என்கிற பெயர் தஷிண பிரதேசம் எனவும், நிச்சலப் பிரதேசம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக இரு வேறு புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகின்றன.

Archived Link: https://archive.ph/UvSP1
Archived Link: https://archive.ph/rKzoA
Archived Link: https://archive.ph/nAXZn
Archived Link: https://archive.ph/myiYG
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification:
தமிழ்நாடு பெயரை நிச்சல பிரதேசம் என்றும், தஷிண பிரதேசம் என்றும் மாற்றுவோம் என்பதாகப் பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் பரவும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தை ஆராய்ந்தோம்.
அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கையின் முழு நகலும் இணைக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து இதுபோன்ற எந்த வாக்குறுதியையும் பாஜக அளிக்கவில்லை என்பது நமக்கு தெளிவாகத் தெரிந்தது.
மேலும், பாஜகவைச் சேர்ந்த தமிழக பிரமுகர்கள் சிலரும் இது குறித்து பரவும் புகைப்படங்கள் போலியானவை என்பதை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.
மேலும், பாஜகவினர் சிலரிடம் தொடர்பு கொண்டு இப்புகைப்படங்களும், தமிழ்நாடு பெயர் மாற்றம் என்னும் அறிவிப்பும் போலியானவை என்பதை நாம் உறுதி செய்து கொண்டோம்.
Conclusion:
தமிழ்நாடு என்கிற பெயர் நிச்சல பிரதேசம்; தஷிண பிரதேசம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்ததாகப் பரவும் புகைப்படங்கள் போலியானவை; எடிட் செய்யப்பட்டவை என்பதை ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources:
BJP Tamil Nadu:https://twitter.com/BJP4TamilNadu
Twitter: https://twitter.com/SuryahSG
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)