ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkவன்னியரசு திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றாரா?

வன்னியரசு திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

விழுப்புர மாவட்ட திமுகவினர் தேர்தல் பணிகளில் தங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னியரசு அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றது.

வன்னியரசு குறித்த பரவும் புகைப்படச் செய்தி
Source: Facebook

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக அணியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடவிருக்கின்றது.  

இக்கூட்டணியில் விடுதலை சிறுத்தைககள் கட்சிக்கு செய்யூர், திருப்போரூர், நாகப்பட்டினம், காட்டுமன்னார் கோயில், அரக்கோணம், வானூர் ஆகிய ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தொகுதியான வானூரில் விசிகவின் துணைப் பொதுச் செயலாளரான வன்னியரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வானூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு விழுப்புர மாவட்ட திமுகவினர் ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்றும், விசிகவின் கொடியுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என்று காரணத்தால் தங்களை ஊருக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்துகின்றனர் என்றும் வன்னியரசு அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக தந்தி தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வன்னியரசு குறித்த பரவும் பதிவு - 1
Source: Facebook

Archive Link: https://archive.ph/Kp3kK 

வன்னியரசு குறித்த பரவும் பதிவு - 2
Source: Facebook

Archive Linkhttps://archive.ph/93nJ6

வன்னியரசு குறித்த பரவும் பதிவு - 3
Source: Facebook

Archive Link: https://archive.ph/gjlOg

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

தேர்தல் பிரச்சாரத்திற்கு திமுகவினர் ஒத்துழைப்பு தர மறுக்கின்றார்கள் என்று வன்னியரசு கூறியதாக தந்தி தொலைக்காட்சியின் புகைப்படச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தி தந்தி தொலைக்காட்சியில் வந்ததா  என்பதை முதலில் அறிந்துக் கொள்ள முடிவு செய்தோம்.

இதற்காக தந்தித் தொலைக்காட்சியின் சமூக ஊடகப் பக்கங்களில் இச்செய்தி குறித்துத் தேடினோம். இந்த தேடலில் வைரலாகும் இந்தப் புகைப்படச் செய்தி போலியானது எனும் உண்மையை நம்மால் அறிய முடிந்தது.

தந்தி தொலைக்காட்சியின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வன்னியரசு குறித்து வைரலான இப்புகைப்படச் செய்தி பொய்யானது என்று தெளிவுப்படுத்தி இருந்தனர்.

வன்னியரசு குறித்த பரவும் பதிவின் உண்மைத்தன்மை.
Source: Twitter

மேற்காணும் டிவிட்டர் பதிவின் அடிப்படையில் பார்க்கும்போது, திமுகவினர் பிரச்சாரத்திற்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று வன்னியரசு அவர்கள்  கூறியதாக பரப்பப்படும் புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது உறுதியாகின்றது.

வன்னியரசு அவர்களும் தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் இந்தத் தகவலை மறுத்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அப்பதிவில்,

“வானூர் தொகுதியில் விடுதலைச்சிறுத்தைகள் எப்படி தேர்தல் களப்பணி ஆற்றுகிறார்களோ அப்படிதான், திராவிட முன்னேற்றக்கழகத்தைச்சார்ந்த செயல்வீரர்கள் களமாடி வருகிறார்கள். வாக்குகள் கேட்டு வருகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால், விடுதலைச்சிறுத்தைகளை விட தீவிரமாக செயல்பட போட்டி போட்டுக்கொண்டு களமாடி வருகிறார்கள்.

அதனால், அதிமுகவினர் தோல்வி பயத்தில் இப்படியான பொய்ச்செய்தியை பரப்பி வருகின்றனர்.

அவதூறு, பொய்,பணம், அதிகார முறைகேடுகள், குண்டர்கள் போன்றவற்றை மட்டுமே நம்பி அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலில் நிற்கிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியான நாங்கள் மக்களை நம்பி மட்டுமே நிற்கிறோம்.

வென்றெடுப்போம் தமிழ்நாட்டை….”

என்று பதிவிட்டுள்ளார்.

வைரலான செய்தி குறித்து வன்னியரசு மறுப்பு
Source: Facebook

Conclusion

விழுப்புர மாவட்ட திமுகவினர் தேர்தல் பணிகளில் தங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று  வன்னியரசு அவர்கள் வருத்தம் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட புகைப்படச் செய்தி போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Thanthi TV’s Twitter Handle: https://twitter.com/ThanthiTV/status/1373828530887303170

Vanni Arasu Facebook Handle: https://www.facebook.com/photo/?fbid=3794289664003360&set=a.412918185473875


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular