இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்சே கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியிலும் தேசத்தின் பிரதமர் மீது நம்பிக்கை வைத்து பொறுமை காக்கும் இந்தியர்களை வணங்குகிறேன் என்று இலங்கை பிரதமர் பதவியை விலகிய மகிந்த ராஜபக்சே கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.



Also Read: பாகிஸ்தானில் பாஜக கொடி; வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்சே கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக ராஜபக்சே இவ்வாறு பேசினாரா என்பதை உறுதி செய்ய அவரது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ட்வீட் செய்திருந்ததை காண முடிந்தது. இப்பதிவில் இதுதவிர்த்து இந்தியா குறித்தோ அல்லது வேறு எதுவும் குறித்தோ எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. இதேபோல் பொது ஊடகங்களிலும் ராஜ்பக்சே இவ்வாறு பேசியதாக செய்தி எதுவும் காணப்படவில்லை.
இதனையடுத்து பாலிமர் நியூஸின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதா என உறுதி செய்ய பாலிமர் நியூஸின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் நியூஸ்கார்டை பாலிமர் நியூஸ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக, பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே என்று இந்நிறுவனம் நியூஸ்கார்ட் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட தகவல் பொய்யாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


இதனையடுத்து பாலிமர் நியூஸின் செய்தி துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து கேட்டதற்கு, இது பொய்யான நியூஸ்கார்ட் என்று அவர்கள் உறுதி செய்தனர்.
Also Read: பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று கூறினாரா தருமபுரம் ஆதீனம்?
Conclusion
இந்தியாவில் வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்சே கூறியதாக பரப்பப்படும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: Manupulated/Altered
Source
Tweet, Mahinda Rajpakada’s thread, Dated May 9, 2022
Tweet, Polimer News thread, Dated May 9, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)