பாகிஸ்தானில் பாஜக கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம் போனதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் மோடி ஆட்சிக்கு வந்து சுதந்திரம் பெற்றுத் தருவார் என நம்பி மக்கள் கொண்டாட்டமாக ஊர்வலம் போனதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
பாகிஸ்தானில் பாஜக கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம் போனதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இவ்வீடியோவின் உண்மைத்தனமை குறித்து அறிய, அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இதில் இவ்வீடியோவானது பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதல்ல, இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற்றபோது ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் பாஜக சார்பில் சோஃபி யூசுப் என்பவர் போட்டியிட்டார். அவர் வேட்பு மனு செய்ய செல்கையில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ஜம்மு காஷ்மீர் பாஜகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்திலும் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட்ட சோஃபி யூசுப் அவர்களும் பக்கத்திலும் இந்நிகழ்வு குறித்து டிவீட் செய்துள்ளார்.
Also Read: பட்டினப்பிரவேச பல்லக்கை தூக்க அண்ணாமலைக்கு அனுமதி இல்லை என்று கூறினாரா தருமபுரம் ஆதீனம்?
Conclusion
பாகிஸ்தானில் பாஜக கொடி ஏந்தி மக்கள் ஊர்வலம் போனதாக வைரலாகும் வீடியோ தவறானதாகும். உண்மையில் இந்நிகழ்வு பாகிஸ்தானில் நடைப்பெறவில்லை; இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடைப்பெற்றதாகும். இதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False / False Context
Source
Video from Engaging Clips, Youtube Channel
Tweet from Jammu and Kashmir BJP
Tweet from Sofi Yousuf
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)