Sunday, April 27, 2025
தமிழ்

Fact Check

மணிப்பூர் வன்கொடுமையில் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பரவும் புகைப்படத் தகவல் உண்மையா?

banner_image

Claim: மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள்

Fact: வைரலாகும் புகைப்படச்செய்தி போலியாக பரவி வருகிறது.

மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களில் இருவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”மணிப்பூரில் பெண்களை ஆடையின்றி அடித்து அழைத்து சென்ற ஆர்எஸ்எஸ் சங்கி நாய்கள்” என்று இந்த புகைப்படம் பரவி வருகிறது.

Screenshot from Twitter  @KARTHIKEYANK78

Archived Link

Screenshot from Twitter @thenisiraj

Twitter Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: டெல்லி அரசு பள்ளியில் பாரத மாதாவின் கிரீடத்தை கழற்றிவிட்டு மாணவர்களுக்கு நமாஸ் கற்பிக்கப்படுகிறதா?

Fact Check/Verification

மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் Polit Bureau உறுப்பினரான சுபாஷினி அலி என்பவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டு, மணிப்பூர் வன்கொடுமை நிகழ்வில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று ட்விட்டரில் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அவர் இந்த பதிவிற்காக வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது நமக்குத் தெரிய வந்தது.

தொடர்ந்து இதுகுறித்து ஆராய்ந்தபோது, வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த சித்தானந்தா சிங் மற்றும் அவரது மகன் என்பது நமக்கு உறுதியானது.

குறிப்பிட்ட நபரின் புகைப்படத்தை பகிர்ந்து சுபாஷினி உள்ளிட்ட பலரும் மணிப்பூர் வன்கொடுமையுடன் தொடர்புடைய ஆர்எஸ்எஸ் நபர்கள் என்று பகிர்ந்த நிலையில் இதைப் பரப்பி வருபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மணிப்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சித்தானந்தா சிங்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “Shame Shame….I am Chidananda Singh here , U can’t get ur objectives to malign image of RSS n my family by using photo of myself n my son. I n my family never involved such heinous crime. What a foolish act. ” என்று தன்னுடைய புகைப்படம் தவறான உள்நோக்கத்துடன் போலி செய்தி இணைக்கப்பட்டு பரப்பப்பட்டு வருவதாக விளக்கமளித்துள்ளார்.

Friends of RSS என்னும் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மீது அவதூறு பரப்பும் வகையில் இந்த புகைப்படச்செய்தி பரவி வருவதாகவும், இதனைப் போலியாக பரப்பும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூஸ்செக்கர் சார்பில் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சித்தானந்தா சிங்கை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “எங்களுக்கு எதிராக இந்த போலிச்செய்தியை பரப்பி வருபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலையே இந்த போலிச்செய்தி பரவி வருவது எனக்கு தெரிந்து விட்டது. திருமதி சுபாஷினி அலி இதனை பகிர்வதற்கு முன்பிருந்தே இச்செய்தி பரவி வருகிறது. டிஜிபியிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன். இந்த போலிச்செய்தியை பரப்பி வருபவர்கள் நோக்கம் என்னை நோக்கி அவதூறு பரப்புவது அல்ல; ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நோக்கி அவதூறு பரப்ப வேண்டும் என்பதே. தற்போதைய கடினமான சூழ்நிலைக்கு குறிப்பிட்ட நபர்கள் தங்களது முட்டாள்தனமான செயல்களால் எண்ணெய் ஊற்றுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

Also Read: பாப்கார்னில் சிறுநீர் கலந்து விற்பனை செய்த முஸ்லீம் இளைஞர் என்று பரவும் பொய் தகவல்!

Conclusion

மணிப்பூர் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பரவும் புகைப்படத்தகவல் போலியாக பரவுகிறது என்பது  நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Twitter Post From, Manipur Police, Dated July 23, 2023
Phone Conversation With Chidananda Singh, Dated July 24, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,944

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.