Claim: காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.
Fact: வைரலாகும் வீடியோவில் காணப்படும் காட்சி ஹைதராபாத் குக்கட்பள்ளி காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் எடுக்கப்பட்டதாகும். காமாக்யா தேவி திருக்கோவில் தேவி யோனி ஸ்வரூபமாகவே வழிபடப்படுகிறாள்; வைரல் வீடியோவில் இருப்பது போன்ற திருமேனி அங்கு கிடையாது.
காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மா காமாக்யா தேவி, (குவஹாத்தி. அசாம் ) மாவின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறைதான் தெரியும். மற்ற நேரங்களில், அவள் முகம் எப்போதும் பூக்களால் மூடப்பட்டிருக்கும். எந்த மனிதனைப் போன்றும் தத்ரூபமாக இருக்கும் மாவின் கண்களைப் பாருங்கள்.” என்று இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் தலைமையகத்தை கைப்பற்றியதாக பரவும் சிரியா வீடியோ!
Fact Check/Verification
காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். அதில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் கீ-வேர்டுகளை உருவாக்கி தேடியபோது கடந்த ஜூலை 15, 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் குக்கட்பள்ளி காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் காமாட்சி அம்மனுக்கு நடைபெற்ற Dasha Aarti வீடியோ நமக்குக் கிடைத்தது. அதிலிருந்தே, வைரலாகும் வீடியோ எடிட் செய்து பரவி வருகிறது என்பது நமக்கு உறுதியானது.
குறிப்பிட்ட யூடியூப் பக்கத்தில் அத்திருக்கோவிலில் காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கு நடைபெறும் அலங்கார, அபிஷேக பூஜைகள் தொடர்பான வீடியோக்கள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில், குறிப்பிட்ட காமாட்சி அம்மன் மற்றும் ஏகாம்பரேஸ்வரருக்கு நடைபெறும் வேறு சில ஆரத்தி வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன.
மேலும், அசாம் காமாக்யா தேவி திருக்கோவில் குறித்த செய்திகளை ஆராய்ந்தபோது அங்கு தேவி யோனி ஸ்வரூபமாகவே வழிபடப்படுகிறாள் என்பதும்; வைரல் வீடியோவில் இருப்பது போன்ற திருமேனி அங்கு கிடையாது என்பதும் நமக்கு உறுதியானது.

Conclusion
காமாக்யா தேவியின் முகம் 15 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்டப்படுவதாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் மூலமாக உறுதியாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video From, Rival Unmatched, Dated July 15, 2016
Report From, maakamakhya.org
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)