Wednesday, April 23, 2025
தமிழ்

Fact Check

பத்திரிக்கையாளர்களுக்கு பயந்தோடிய மீனாட்சி லேகியின் நடனம் என்று பரவும் பொய் வீடியோ!

banner_image

Claim:ஒன்றிய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம்

Fact: வைரலாகும் வீடியோவில் இருப்பவர் மீனாட்சி லேகி அல்ல

சமீபத்தில் மத்திய அமைச்சரான மீனாட்சி லேகியிடம் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கப்படுகையில் சரியாக பதிளளிக்காமல் ஓடிய சம்பவம் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பத்திரிக்கையாளர்களைக் கண்டுப் பயந்து ஓடிய ஒன்றிய பாஜக அமைச்சர் மீனாட்சி லேகியின் தரைநக்கி டான்ஸ்….!” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter@ASHOK25539881

Twitter Link | Archived Link

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter@SwethaS50293130

Twitter Link | Archived Link

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ
Screenshot from Twitter@ManiSek32574261

Twitter Link | Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கர்நாடகாவில் ரயிலை கவிழ்க்க சதியா? வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!

Fact Check/Verification

பத்திரிக்கையாளர்களுக்கு பயந்து ஓடிய பாஜக அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, கூகுள் ரிவர்ஸ் சர்ச் முறையை பயன்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆராய்ந்தோம்.

அந்த ஆய்வில் டிசம்பர் 27, 2021 அன்று “Woman sets dance floor on fire with her desi moves to Hrithik Roshan’s Bang Bang title song. Viral video” என்று குறிப்பிட்டு இந்தியா டுடே இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ
Screengrab from India Today

இந்த செய்தியில் வீடியோவில் காணப்படும் பெண் மீனாட்சி லேகி என்று எந்த இடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை. இந்தியா டுடே தவிர்த்து டைம்ஸ் நவ், இந்தியா அஹெட் நியூஸ் உள்ளிட்ட ஊடகங்களும் இந்த வீடியோ குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஊடகங்களும் வைரலாகும் வீடியோவில் காணப்படுவது மீனாட்சி லேகி என்று குறிப்பிட்டிருக்கவில்லை. அனைத்து ஊடகங்களும் ‘பெண்’ என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தது.

தொடர்ந்து தேடியதில் இந்த வீடியோவானது “nisargmediaproductions’ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன்முதலில் டிசம்பர் 13, 2021 அன்று பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

Instagram will load in the frontend.

இந்த வீடியோவில் அப்பெண்ணின் முகம் தெளிவாக தெரிந்தது. அந்த முகத்தை மீனாட்சி லேகியின் முகத்தோடு ஒப்பிட்டு பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் இருப்பவர் மீனாட்சி அல்ல என்பது உறுதியாகியது.

மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று வைரலாகும் வீடியோ

Also Read: Fact Check: முகமது ஷெரீப் அகமது என்ற பெயர் கொண்ட ஒடிசா ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் தலைமறைவா?

Conclusion

பத்திரிக்கையாளர்களுக்கு பயந்து ஓடிய பாஜக அமைச்சர் மீனாட்சி லேகியின் நடனம் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Instagram Post from Nisarg Media Production, Dated December 13, 2021

Report from India Today, Dated December 27, 2021
Report from India Ahead News, Dated December 27, 2021
Report from Times Now, Dated June 02, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,862

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.