Claim: ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் – டிராய்
Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் செய்தி போலியானது என்று TRAI விளக்கமளித்துள்ளது.
ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்க இருப்பதாக செய்தி ஒன்று வைரலாகியது. பல்வேறு ஊடகங்களும் இச்செய்தியை வெளியிட்டிருந்தன.
“நெக்ஸ்ட்… “ஒரே மனைவியுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருந்தால் கட்டணம் வசூலிக்கப்படும்” அதானே..?” என்றெல்லாம் பலரும் இந்த செய்தியை ஷேர் செய்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கங்கனாவை அறைந்த CISF காவலர் ராகுல் காந்தியுடன் நிற்பதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்கவுள்ளதாகப் பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்தி பரவிய நிலையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இதுகுறித்த விளக்கத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் அளித்துள்ளது.
அதன்படி, ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்தும் நபருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் எண்களை பயன்படுத்துபவர்களுக்கும் கட்டணம் என்பதாகப் பரவிய தகவல் பொய்யானது என்று விளக்கமளித்துள்ளது டிராய்.
”The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.” என்று TRAI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், செல்போன் எண்கள் குறித்து பரவிய செய்தி போலியானது என்பது தெளிவாகிறது.
Also Read: அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?
Conclusion
ஒரே செல்போன் எண்ணை பல ஆண்டுகளாக பயன்படுத்துபவர்களுக்கு டிராய் கட்டணம் விதிக்கவுள்ளதாகப் பரவும் தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
X Post From, TRAI, Dated June 14, 2024
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)