மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கேந்திரிய வித்யாலயாவிற்கு சிபாரிசு கடிதம் வழங்கிய எம்பி கனிமொழி என்று பரவும் பழைய தகவல்!
Fact Check/Verification
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை எய்ம்ஸ் குறித்து சமீபத்தில் ஏதேனும் பேசியிருக்கிறாரா என்று பார்த்தபோது, ஜனவரி 24, 2023 (செவ்வாய்க்கிழமை) அன்று “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2026ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும்” என்று பேசிய வீடியோ நமக்குக் கிடைத்தது.
தொடர்ந்து, இதே செய்தியை சாணக்யா டிவி நியூஸ்கார்ட்-ஆக வெளியிட்டுள்ள நிலையில் அதை எடிட் செய்தே அண்ணாமலை, மதுரை எய்ம்ஸ் 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று கூறியதாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து, அண்ணாமலை தரப்பில் அவரது செயலாளர் பிரபாகரைக் கேட்டபோது, குறிப்பிட்ட நியூஸ்கார்ட் “போலியானது” என்று உறுதி செய்தார். தொடர்ந்து, சாணக்யா டிவி நிறுவனர் மற்றும் ஆசிரியர் ரங்கராஜ் பாண்டேவும் இதனை “போலியாக எடிட் செய்யப்பட்டது” என்று உறுதி செய்தார்.


Also Read: சவுக்கு சங்கர் நாதக வேட்பாளராக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றாரா?
Conclusion
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 3023 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Sources
Twitter Post From, Chanakyaa TV, Dated January 24, 2023
YouTube Post From, News 7 Tamil, Dated January 24, 2023
Phone conversation With, Prabhakar, PA of Annamalai
Phone Conversation With, Rangaraj Pandey, Founder, Chanakyaa TV
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)