பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான கோவனுக்கு புதுச்சேரி மதுபானக் கடை ஒன்றில் அடி, உதை என்பதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான கோவன், மதுபானக்கடைகளுக்கு எதிராக பல்வேறு புரட்சிகரமான பாடல்களை இயற்றிப் பிரச்சாரம் செய்து வருபவர். கலை மக்கள் இலக்கிய கழகத்தைச் சார்ந்தவரான கோவன், மது ஒழிப்பு பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருபவர்.
இந்நிலையில், “சமூக ஆர்வலர் கோவனுக்கு சரமாரி அடி, உதை. புதுச்சேரியில் நண்பர்களுடன் மது அருந்தும் போது மதுபான கடை ஊழியர்கள் உடன் மோதல்” என்பதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பொருளாதார விலையுயர்வு சூழலில் மக்கள் கீதா சாரத்தை பின்பற்ற வேண்டும் என்றாரா நிர்மலா சீதாராமன்?
Fact Check/Verification
பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான கோவனுக்கு புதுச்சேரி மதுபானக் கடை ஒன்றில் அடி, உதை என்பதாகப் பரவிய நியூஸ்கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட வைரல் நியூஸ்கார்டு U2 Brutus என்கிற சமூகவலைத்தள ஊடகத்தின் பெயரில் பரவி வருகின்ற நிலையில் குறிப்பிட்ட செய்தி மற்றும் நியூஸ்கார்டு தவறாக பரவி வருகிறது என்பதாக அவர்களது அதிகாரப்பூர்வ சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், கோவன் சார்ந்துள்ள கலை இலக்கியக் கழகம் சார்பிலும் புதிய கலாச்சாரம் செய்திகள் என்கிற சமூகவலைத்தளப் பக்கத்தில் ”எமது தோழர்கள் மீதும் குறிப்பாக தோழர் கோவன் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு அவதூறு பரப்புகின்றனர்.” என்று விளக்கமளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion
பாடகர் மற்றும் சமூக ஆர்வலரான கோவனுக்கு புதுச்சேரி மதுபானக் கடை ஒன்றில் அடி, உதை என்பதாகப் பரவிய நியூஸ்கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated Content/False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)