யூடியூபர் ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டு டிவீட் செய்ததாத ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலாகி வருகின்றது.

நாம் தமிழர் கட்சி ஆதரவாளரான யூடியூபர் சாட்டை துரைமுருகன் காஞ்சிபுரத்திலுள்ள தனியார் தொழிற்சாலை குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் இவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகவும் கூறப்படுகின்றது

இந்நிலையில் சாட்டை முருகனை பிணையில் எடுக்க டெல்லியிலிருந்து வழக்கறிஞரை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு போதிய நிதிவசதி இல்லாததால் மக்கள் நிதி தரவேண்டும் என்றும் யூடிபர் ராஜவேல் நாகராஜன் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
யூடியூபர் ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டு டிவீட் செய்ததாத ஸ்க்ரீன்ஷாட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட் போலியானதுதான் என்பதை நம்மால் அறிய முடிந்தது.
ராஜவேல் நாகராஜன் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் டஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து,
“இப்படி நான் போடாத ஒரு ட்வீட்டை போட்டோஷாப் செய்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதை திட்டமிட்டு பகிர்ந்திருக்கும் ஐடிக்களை பார்ரத்தாலே தெரியும் அவர்களின் வன்மம் ஏன் என! உள்நோக்கத்தோடு இதை பரப்பிய நபர்கள் மேல் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்படும்.”
என்று பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Also Read: பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி போராடியதாக வைரலாகும் புகைப்படம்!
Conclusion
யூடியூபர் ராஜவேல் நாகராஜன் சாட்டை துரைமுருகனை பிணையில் எடுக்க நிதி கேட்டு டிவீட் செய்ததாத வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Fabricated
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)