Claim: சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன்
Fact: வைரலாகும் வீடியோ பொழுதுபோக்கிற்காக படம் பிடிக்கப்பட்டதாகும்.
சொந்த தங்கையை மணந்து கொண்ட அண்ணன் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“இதுதான் சனாதன ஆட்சி. சொந்த தங்கையை திருமணம் செய்த அண்ணன். வட இந்தியாவை பார்த்து நாடு பெருமை கொள்கிறது” – யாரோ சொன்னது” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஐயப்பன் மாலையை அறுத்து மாணவனை வெளியே தள்ளிய கிறித்தவ பள்ளி; வைரலாகும் வீடியோத்தகவல் உண்மையானதா?
Fact Check/Verification
சொந்த தங்கையை மணந்து கொண்ட அண்ணன் என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் ஒரு ஃப்ரேமில் Kanhaiya Singh என்று எழுதப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது. அதில், “இந்த வீடியோ பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது” என்றும் குறிப்பிட்டிருந்தது.

எனவே, Kanhaiya Singh Scripted Video என்கிற கீ-வேர்டு மூலமாக நாம் தேடியபோது “ Kanhaiya Kashyap 02” என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த ஜனவரி 01, 2025 அன்று 7 நிமிடம் 23 நொடிகள் உடைய இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது நமக்குக் கிடைத்தது.
இந்த ஃபேஸ்புக் பக்கம் கேலி, நகைச்சுவை, பொழுதுபோக்கு வீடியோக்களை வெளியிடக் கூடியது என்றும் அப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் இருவர் இணைந்து படம்பிடிக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ள மற்ற சில வீடியோக்களை இங்கே மற்றும் இங்கே காணுங்கள். குறிப்பிட்ட புனையப்பட்ட வீடியோவே உண்மையானது என்று பரவி வருகிறது.
Also Read: புதுப்பேட்டை பட பாணியில் பின்புறம் நின்ற பெண்ணுக்கு தாலி கட்டிய மணமகன் என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
சொந்த தங்கையை மணந்து கொண்ட அண்ணன் என்று பரவும் வீடியோ புனையப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook post by Kanhiyakashyap02, Dated January 01, 2025
(இந்த கட்டுரை நம்முடைய News Checker உருதிலும் வெளியாகியுள்ளது)
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)