Claim: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் ஏன் பார்க்கக்கூடாது என்று இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி
Fact: வைரல் வீடியோ OMG திரைப்படத்தின் ரசிகர்கள் விமர்சனத்தில் எடுக்கப்பட்டதாகும்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஏன் பார்க்ககூடாது என்று இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
#TheKeralaStory என்கிற ஹேஷ்டேக்குடன் அப்பெண்ணிற்கு வாழ்த்து கூறிப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
”சூப்பர். அவுங்க ஒன்னும் அம்மணமாக நடிக்கலையே நான் ஏன் படம் பார்க்ககூடாது ? சொல்லுங்க டா. யூ ட்யூப் சேனல் நடத்திகிட்டு இவங்க தொல்லை தாங்கமுடியலைடா ! வாழ்த்துகள் சகோதரி செருப்பால அடிச்ச மாதிரியான பதில் #TheKeralaStory லவ் ஜிகாத்#” என்று இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?
Fact Check/Verification
தி கேரளா ஸ்டோரி படத்தை ஏன் பார்க்கக்கூடாது நாங்கள் என்று இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவில் இடம்பெற்றுள்ள மைக்கில் “Voice of Madras” என்று இடம்பெற்றிருந்த நிலையில் அந்த யூடியூப் சேனலில் குறிப்பிட்ட பெண்ணின் வீடியோ குறித்து தேடினோம்.
நம் தேடலின் முடிவில், “சண்டையில் முடிந்த Movie Review Oh My Ghost Review | OMG Movie Review | OMG Movie Public Review” என்கிற தலைப்பில் கடந்த டிசம்பர் 2022 அன்று வீடியோ ஒன்று இடம்பெற்றிருந்தது.
சன்னி லியோன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த OMG (Oh My Ghost) திரைப்படத்தின் ரசிகர்கள் விமர்சனத்தில் அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வந்த இஸ்லாமியப் பெண்ணிடம் படம் பார்த்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அப்படி என்றால் இஸ்லாமியர்களுக்கு அனுமதி இல்லை; ஹிஜாப் அணிந்து படம் பார்க்க அனுமதி இல்லை என்று போர்டு வைத்துவிடுங்கள். அவங்க என்ன ஆடையில்லாமலா நடித்திருக்கிறார்கள்? படம் பார்ப்பது என்னுடைய உரிமை.” என்பதாகப் பதிலளித்திருந்தார்.
குறிப்பிட்ட வீடியோவையே தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அந்த இஸ்லாமியப் பெண் கேள்வி எழுப்பியதாகப் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தாரா?
Conclusion
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் ஏன் பார்க்கக்கூடாது என்று இஸ்லாமிய பெண் ஒருவர் கேள்வி எழுப்பியதாக பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
YouTube Video, From Voice of Madras, Dated December 30, 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)