Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக ஸ்டாலினை பாராட்டினார் பிரதமர்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தவறாக சித்தரிப்பதாக கூறி கடும் எதிர்ப்பு வந்த நிலையில், இப்படத்தின் இந்தி பதிப்பு மல்ட்பிளக்ஸ் திரையரங்குகளில் மட்டும் வெளியானது. இப்படம் வெளியான திரையரங்குளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும்நாம் தமிழர் கட்சி உட்பட அரசியல் கட்சிகள் இப்படத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வந்தன. இதனைத் தொடர்ந்து மல்ட்பிளக்ஸ்களிலும் இப்படம் திரையிடப்பட மாட்டாது என்று மல்டிப்ளக்ஸ் திரையரங்கு நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், ‘தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு பாதுகாப்பு அளித்த ஸ்டாலினின் செயல் துணிச்சல் மிக்கது’ என்று பிரதமர் மோடி தமிழக முதலமைச்சரை பாராட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: மலப்புரத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டதாக பரவும் தவறான புகைப்படம்!
Fact Check/Verification
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளாரா என தேடினோம். இதில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பிரதமர் பேசி இருப்பதை காண முடிந்தது. ஆனால் பிரதமரின் இந்த பேச்சில் எந்த ஒரு இடத்திலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அவர் பேசி இருக்கவில்லை.
பிரதமர் பெல்லாரியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து பேசி இருந்ததாவது,
"சமூகத்தில் புரையோடும் ஒரு புதுவித பயங்கரவாதத்தை இப்படம் அடையாளப்படுத்தியிருக்கிறது. தீவிரவாதத்தால் ஏற்படும் விளைவுகள் இதில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. கேரளா போன்ற அழகான மாநிலத்தில் பயங்கரவாதம் எத்தகைய ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது என இந்த திரைப்படம் பேசியுள்ளது. ஆனால், காங்கிரஸ் இந்த படத்துக்குத் தடை கோருவதன் மூலம் தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக உதவ முயல்கிறது. தீவிரவாதிகளுக்கு துப்பாக்கி, தோட்டாக்கள், ஆயுதங்களைத் தாண்டி புதியமுகம் இருக்கிறது. அதை அந்தப் படம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது!”
என்று பிரதமர் பேசி இருந்தார்.
இதுக்குறித்து வேறு சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அவற்றை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், அந்நிறுவனம் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதா என தேடினோம்.
இதில், “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தீவிரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் வகையில் அமைந்துள்ளது. தீவிரவாதத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத போக்குடன் நிற்கிறது. வாக்குவங்கிக்காக தீவிரவாதத்தை காங்கிரஸ் கட்சி பாதுகாத்துள்ளது” என்று பிரதமர் மோடி பேசியதாக கடந்த வெள்ளியன்று (மே 5, 2023) தந்தி தொலைக்காட்சி நியூஸ்கார்ட் ஒன்றை வெளியிட்டிருந்தை காண முடிந்தது.
அந்த நியூஸ்கார்ட்டை எடிட் செய்தே மேற்கண்ட போலி நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்த நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் பொறுப்பாளர் வினோத் குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட குறித்து விசாரித்ததில், அந்த நியூஸ்கார்ட் போலியானது என்பதை உறுதி செய்தார்.
Conclusion
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பிரதமர் மோடி பாராட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Photo
Our Sources
Facebook post, from Thanthi Tv, Dated May 05, 2023
Phone Conversation Vinoth Kumar, Thanthi TV, Dated May 05, 2023
Report from ANI News, Dated Dated May 05, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.