Claim: பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறினார்.
Fact: திருப்பதி கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து ரமண தீட்சதலு கூறிய குற்றச்சாட்டே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது.
‘கடவுள் என்பது வெறும் கல் தான் என்பதை கடவுள் மறுப்பாளர்களை விட பார்ப்பானிய கும்பல் நன்கு அறிவார்கள்!’ என்று குறிப்பிட்டு திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு என்பவர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
அந்த வீடியோவில், நாங்கள் விஜபிகளுக்கு லட்டு கொடுத்த பிறகு மிச்சம் இருந்தால்தான் மக்களுக்கு தருவோம். விஜபிகளுக்கு நாங்கள் கொடுத்தால்தான் அவர்களுடைய அருள் எங்களுக்கு கிடைக்கும். அவர்களால் எங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும், பரிசு கிடைக்கும். எங்களுக்கு பெருமாள் அருளை விட விஐபிகளின் அருளே முக்கியம் என்று திருப்பதி அர்ச்சகர் பேசுவதாக உள்ளது.
பலரும் இவ்வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Factcheck / Verification
பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இவ்வீடியோவின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மையை அறிய அதன் முழுப்பகுதியை தேடினோம்.
இத்தேடலில் ஜூலை 2, 2018 அன்று சன் நியூஸின் டிவிட்டர் பக்கத்தில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் ரமண தீட்சதலுவின் நேர்காணலில் 5 நிமிடங்கள் மட்டும் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
தொடர்ந்து இந்த நேர்காணலின் முழுப்பகுதி குறித்து தேடினோம். சன் நியூஸின் யூடியூப் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களில் இந்த நேர்காணலை கண்டறிய முடியவில்லை. ஆனால் டெய்லிமோஷன் தளத்தில் இந்தியா வீடியோ எனும் பக்கத்தில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.
இந்த வீடியோவில் திருப்பதியில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து பல குற்றச்சாட்டுகளை ரமண தீட்சலு கூறியிருந்தார். இந்த வீடியோவை ஆங்காங்கே வெட்டி, முன்னுக்குப்பின் ஒட்டி, திருப்பதி ஊழியர்கள் குறித்து ரமண தீட்சலு கூறிய குற்றச்சாட்டுகளை, அவரின் கருத்தாக திரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது என்பது நமக்கு தெளிவாகின்றது.
தொடர்ந்து தேடியதில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் ரமண தீட்சதலு திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் நகைகள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளதை காண முடிந்தது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு வீடியோவானது ஜூலை 17, 2018 அன்று மொபைல் ஜர்னலிஸ்ட் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
Also Read: மதுப்பிரியர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா அறிவித்ததாக பரவும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்ட்!
Conclusion
பெருமாளின் அருளை விட விஐபிகளின் அருளே எங்களுக்கு முக்கியம் என்று திருப்பதி தலைமை அர்ச்சகர் ரமண தீட்சதலு கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும். திருப்பதி கோயிலில் பணிபுரியும் ஊழியர்கள் குறித்து ரமண தீட்சதலு கூறிய குற்றச்சாட்டே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது என்பது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Our Sources
Report from SUN NEWS, dated July 02, 2018
Video from Dailymotion
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)