Claim
மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்ட விண்ணப்பப்படிவம்.
Fact
வைரலாகும் தகவல் போலியானதாகும். அரசு தரப்பில் இதுபோன்ற எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை என்று PIB விளக்கமளித்துள்ளது.
மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. நம்முடைய வாசகர் ஒருவர் வாட்ஸப்பில் இதுகுறித்து நம்மிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

“மாணவர்களின் லேப்டாப் திட்டம் 2023க்கான விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. நிதிக்காரணங்களால் சொந்தமாக மடிக்கணினி வாங்கும் நிலையில் இல்லாத மற்றும் அவர்களின் கல்வி நிலையில் லேப்டாப் தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த திட்டம் திறக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 960,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கற்றலை மேம்படுத்த இலவச லேப்டாப் வழங்கப்படும். விண்ணப்பம் தொடங்கப்பட்டு விண்ணப்பித்த மாணவர்கள் தங்கள் மடிக்கணினிகளைப் பெறத் தொடங்கியுள்ளனர்.இங்கே பதிவு செய்து விண்ணப்பிக்கவும்.” என்பதாக இந்த தகவல் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: WhatsApp அழைப்புகள் அரசால் கண்காணிக்கப்படுகின்றது என்று பரவும் வதந்தி!
Fact Check / Verification
மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்பதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் ஏதேனும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாம் தேடியபோது அவ்வாறு எந்தவித அறிவிப்பும் வெளியாகியிருக்கவில்லை.
இதுகுறித்து மேலும் தேடியபோது, பல்வேறு இணையதள இணைப்புகளுடன் கடந்த சில வருடங்களாகவே இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிந்தது.
இந்த தகவல்கள் குறித்து அடிக்கடி விளக்கமளித்துள்ள PIB நிறுவனம், தங்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “இலவச லேப்டாப் என்று பரவும் இணைப்புகள் போலியானவை. அரசு தரப்பில் அதுபோன்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளது.
மேலும், அரசு சார்ந்த உண்மையான இணையதளப்பக்கங்களுக்கும், போலியான இணையப்பக்கங்கள் குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது PIB என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?
Conclusion
மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டிற்கான இலவச லேப்டாப் திட்டம் என்று பரவும் தகவல் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Twitter Posts From, PIB
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.