Thursday, March 20, 2025
தமிழ்

Fact Check

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடிய வீடியோவா இது? உண்மை என்ன?

banner_image

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

vyjayanthimala

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா, நடனக்கலையில் வல்லவர். வஞ்சிக்கோட்டை வாலிபன் உட்பட பல்வேறு படங்களில் சிறந்த நடிப்பையும், நடனத்திறமையையும் வெளிப்படுத்தியவர்.

இந்நிலையில், “இது வைஜெயந்தி மாலா. Age 99 மனசு இளமையா இருக்கும் போது வணங்குவோம்” என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Screenshot from Facebook/mookkammal.k
Screenshot From Facebook/RameshSakthi
Screenshot From Facebook/saravanan.t.7165331

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ராகுல் காந்தி பெண் ஒருவரை முத்தமிடுவது போன்று பிரியங்கா காந்தி முகத்தில் பத்திரிக்கையாளர் ரவிஷ் குமார் முகத்தை எடிட் செய்து பரப்பும் பாஜகவினர்!

Fact Check / Verification

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில் அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தோம்.

வைரலாகும் வீடியோவை கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது, அதன் முடிவில் 93 வயதான பெண்மணி ஒருவர் ஷாமி கபூரின் பிரபலமான பாடலான “Badan Pe Sitaare Lapate Huye” என்கிற பாடலுக்கு நடனமாடி வைரலாகிய பாட்டி என்கிற தகவல் நமக்குக் கிடைத்தது. 1969 ஆம் ஆண்டு வெளியான “பிரின்ஸ்” என்கிற இந்த படத்தில் ஷாமி கபூர் மற்றும் வைஜெயந்திமாலா இணைந்து நடித்திருந்தனர்.

தொடர்ந்த நம் தேடலின் முடிவில், கடந்த டிசம்பர் 05, 2022 அன்று நரேந்திர சிங் என்பவர் பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவு நமக்குக் கிடைத்தது. அதில், இந்தியில் “93 வயதில் ஷாமி கபூரின் மயக்கும் பாடலுக்கு நடனமாடும் பாட்டி” என்று பதிவிடப்பட்டிருந்தது. இது குறித்த செய்தி கடந்த டிசம்பர் 19, 2022 அன்று NDTV இந்தியாவில் வெளியாகியுள்ளது. மேலும், வைரல் வீடியோவின் உண்மையான செய்தி குறித்து இங்கே மற்றும் இங்கே காணுங்கள். இதன்மூலம், குறிப்பிட்ட வீடியோவில் நடனமாடும் முதிய பெண்மணி நடிகை வைஜெயந்தி மாலா இல்லை என்பது தெளிவாகிறது.

தொடர்ந்த நம் தேடலில், கடந்த டிசம்பர் 22, 2022 அன்று சென்னை கலாஷேத்ராவில் நடைபெற்ற கலா சம்ப்ரேக்‌ஷனா (Kala Samprekshana) என்கிற நிகழ்வில் வைஜெயந்திமாலா நடனமாடியுள்ளார். அதிலிருந்தே, வைரல் வீடியோவில் நடனமாடுபவரும், பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலாவும் வேறுவேறு நபர்கள் என்று நம்மால் அறிய முடிகிறது.

அவருடைய சமீபத்திய புகைப்படங்கள் இடம்பெற்ற செய்திகளையும் இங்கே மற்றும் இங்கே உங்களுக்காக இணைத்துள்ளோம்.

Also Read: திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்! 

Conclusion

பழம்பெரும் நடிகை வைஜெயந்திமாலா தனது 99 வயதில் நடனம் ஆடுவதாக வைரலாகி வருகின்ற வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
NDTV India report, December 19, 2022
Tweet by Narendra Singh, December 5, 2022
YouTube Video From, Kalakshetra Foundation, Dated December 22, 2022
Newschecker English article, Dated February 15, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
No related articles found
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,500

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

எங்கள் வலைத்தளம் குக்கிகளை பயன்படுத்துகிறது

நாங்கள் குக்கீகளை மற்றும் ஒருவரியக் கொள்கைகளை உதவியுடன் பயன்படுத்துகிறோம், விளக்கமயமாக்க மற்றும் விளக்க பொருட்களை அளவுபடுத்த, மேலும் சிறப்பு அனுபவத்தைப் பயன்படுத்துகிறோம். 'சரி' என்பதை கிளிக் செய்யவும் அல்லது குக்கீ விருதங்களில் ஒரு விருப்பத்தை சோதிக்கும் மூலம், இதுவரை விளக்கப்படுத்தப்பட்டது, என ஒப்புக்கொண்டுள்ளீர்கள் என்று நீங்கள் இதுவரை உங்கள் ஒப்புதலை அறிவிக்கின்றீர்கள், எங்கள் குக்கீ கொள்கையில் உள்ளது.