திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024
திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

HomeFact Checkதிமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக...

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக பழைய வீடியோவை வெளியிட்ட அதிமுக கோவை சத்யன்! 

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ

அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், “விழித்துக்கொண்ட ஈரோடு மக்கள். ரூ1000 வாங்கினியே என்றதற்கு அந்த பாட்டியோட பதில்… விடியலின் சாதனை பட்டியலை விளக்கிய பாட்டி…..,.சபாஷ்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ
Screengrab from Twitter @KovaiSathyan

இதே வீடியோவை இதே தகவலுடன் பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ
Screengrab from Facebook/ Manikandan Vadalur
திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ
Screengrab from Facebook/ ammaiappan.anbu

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: உ.பி.யில் தலித் பெண் ஆற்றில் குளித்ததால் பாஜகவினர் அவரை தாக்கினரா?

Factcheck / Verification

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். இந்த ஆய்வில் இந்த வீடியோவானது மூன்று வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோ என்பதை அறிய முடிந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே Rajesh DMK என்கிற டிவிட்டர் பக்கத்தில், “எடப்பாடி கொடுத்த 1000 ரூபாய் மக்களின் வரி பணம் தான் என்பதை இந்த கிராமத்து பாட்டி எந்த மாதிரி ஸ்லாங்கில் சொல்றாங்க பாருங்க மக்களே”  என்று குறிப்பிட்டு இவ்வீடியோவானது பகிரப்பட்டுள்ளதை நம்மால் காண முடிந்தது.

இவரைப்போலவே பலரும் இவ்வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து இந்த வீடியோ முதன்முதலில் எப்போது பகிரப்பட்டது என்று தேடுகையில், ஏப்ரல் 27, 2020 அன்று @sivakosh என்கிற டிக்டாக் கணக்கிலிருந்து இந்த வீடியோ முதன்முதலில் பகிரப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்தது.

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக வைரலாகும் வீடியோ
Screengrab from Tiktok @sivakosh

இதனடிப்டையில் காண்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பிலிருக்கும்போது  பகிரப்பட்ட வீடியோவை திமுக ஆட்சியில் தற்போது பகிரப்பட்ட வீடியோ என்று சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.

Also Read: நடிகர் ரன்பீர் கபூர் ஆத்திரத்தில் ரசிகரின் செல்போனை தூக்கி எறிந்தாரா? உண்மை என்ன?

Conclusion

திமுக அரசு அதிக வரி விதிப்பதாக பாட்டி ஒருவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ மூன்று வருடங்களுக்கு முந்திய பழைய வீடியோ என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Sources

Tweet from Rajesh DMK dated April 28, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

1 COMMENT

Most Popular