விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று பரவி வருகின்றது.

வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு புகைப்படம் ஒன்றை அனுப்பி, அதன் உண்மைத்தன்மை குறித்து கேட்டிருந்தார்.
அப்புகைப்படத்தில்,
நவம்பர் 28-ம் தேதியிலிருந்து டிசம்பர் 5-ம் தேதி வரை குழந்தைகளுக்கு இலவச இருதய ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. இதற்காக 8 மருத்துவர்கள் இங்கிலாந்தில் இருந்து வருகிறார்கள்.
தொடர்புகொள்ள வேண்டிய முகவரி: விஜயவா ஹாஸ்பிட்டல், மொபைல் நம்பர் 9710507105, 9629288403, 9380901361. இச்செய்தியை அதிகமாக பகிரவும். பிஞ்சு குழந்தைகளின் நலனுக்காக
என குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் தொடர்ந்து தேடியதில் சமூக வலைத்தளங்களில் பலரும் இத்தகவலை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
நம் தேடலில் இத்தகவலானது கடந்த சில ஆண்டுகளாகவே சமூக ஊடகங்களில் பரவி வருவதை நம்மால் காண முடிந்தது. வைரலாகும் தகவலில் தேதி குறிப்பிடப்பட்டிருந்ததேயொழிய ஆண்டு குறிப்பிட்டிருக்கவில்லை. இதனையடுத்து வைரலாகும் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணை தொடர்புக் கொள்ள முயற்சித்தோம். ஆனால் அந்த எண்கள் எதுவும் பயன்பாட்டில் இல்லை.
இச்செய்தியில் சில பதிவுகளில் விஜயவா ஹாஸ்பிட்டல் என்றும், சில பதிவுகளில் விஜயா ஹாஸ்பிட்டல் என்றும் குறிப்பிட்டிருப்பதை காண முடிந்தது.
விஜயவா ஹாஸ்பிட்டல் என்று இணையத்தில் தேடும்போது இப்பெயரில் எந்த ஒரு மருத்துவமனையும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து விஜயா மருத்துவமனையை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில், ‘இத்தகவல் தவறானது, இதை நம்ப வேண்டாம்’ என்று தெளிவுப்படுத்தினர்.
Also Read: நிர்மலா சீதாராமனின் மகள் இந்திய இராணுவத்தில் பணிபுரிகின்றாரா?
Conclusion
விஜயா மருத்துவமனையில் இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Phone Conversation with Vijaya Hospital Staff
Self Ananlysis
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)