ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024
ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

HomeFact Checkசூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறியதாக  பரவும் தகவல்

“சூதாட்டம் என்பது மஹாபாரத காலத்திலிருந்தே இந்து மதத்தின் ஒரு அங்கம். ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்தலாமே தவிர அறவே ஒழிப்பது என்பது உள்நோக்கம் கொண்டது. இந்து கலாச்சார அடையாளங்களை அழிக்கும் முயற்சி” என்று தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக  நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறியதாக  பரவும் தகவல் - 01
Source: Twitter @jaya2016maha
சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறியதாக  பரவும் தகவல் - 02
Screenshot from Facebook / csekar004
சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று அண்ணாமலை கூறியதாக  பரவும் தகவல் - 03
Screenshot from Facebook / K S Muthu

Also Read: காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பிட்டபின் பரவிய போலிச் செய்திகளின் தொகுப்பு!

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக  நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

தமிழக பாஜகவின் ஐடி விங்க் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி இத்தகவல் பரப்பப்படுவதால் தமிழக பாஜகவின் சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் இடம்பெற்றுள்ளதா என தேடினோம். இதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்ட் வெளிவந்ததற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் CTR நிர்மல்குமாரை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அது போலியான நியூஸ்கார்ட் என்று தெளிவுப்படுத்தினார்.  

மேலும் அவரது டிவிட்டர் பக்கத்திலும் வைரலாகும் நியூட்கார்ட் போலியானது என்று நிர்மல்குமார் பதிவிட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று உறுதியாகியப்பின், அண்ணாமலை ஆன்லைன் சூதாட்டத்தை  ஆதரித்து எங்கேயாவது பேசினாரா என தேடினோம். இத்தேடலில் ஆன்லைன் சூதாட்டத்தை எதிர்த்து, அதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசியது நமக்கு தெரிய வந்தது.

மேலும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தும் தமிழக அரசு அரசாணை வெளியிடாதது ஏன்? என்றும் இச்சந்திப்பில் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார்.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் காண்கையில் அண்ணாமலை ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆதரவாக பேசவில்லை என்பதும், அவர் அதற்கு எதிராகத்தான் பேசியுள்ளார் என்பதும் உறுதியாகின்றது.

Also Read: உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பார்க்க 50GB இலவச டேட்டாவை வழங்குன்றதா FIFA?

Conclusion

சூதாட்டம் இந்து மதத்தின் அங்கம்; ஆன்லைன் சூதாட்டங்களை முழுவதுமாக அழிக்க கூடாது என்று தமிழக பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக  சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Tweet By @CTR_Nirmalkumar, Dated November 29, 2022
Facebook Post By BJP4TamilNadu, Dated November 29, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular