Claim: மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றார் அமித் ஷா.
Fact: வைரலாகும் வீடியோ எடிட் செய்யப்பட்டதாகும். தெலங்கானாவில் முஸ்லீம்களுக்கு தரப்படும் இட ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்றே அமித் ஷா பேசினார்.
பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ST, SC, OBC இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

