புதன்கிழமை, மே 15, 2024
புதன்கிழமை, மே 15, 2024

HomeFact Checkஎந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டது.

Fact: கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறியே இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

“மணிப்பூரில் வாக்குப்பதிவின் போது எந்தக் கட்சிக்கு ஓட்டு போட்டாலும் அனைத்து வாக்குகளும் பாஜகவுக்கு மட்டுமே விழுந்ததால். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்தனர்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல்

X Link | Archive Link

மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம்.

அத்தேடலில் EVMs Vandalised Over “Proxy Voting” Allegations In Manipur என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து NDTV செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.  அதாவது கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறி இந்த வன்முறை சம்பவம் நடந்ததாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் இந்தியன் எக்ஸ்பிரஸும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியிலும் கள்ள ஓட்டு காரணமாகவே இந்த வன்முறை நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்களை உடைத்ததாக அச்செய்தியில் எவ்விடத்திலும் குறிப்பிட்டிருக்கவில்லை.

இதனையடுத்து தேடுகையில் வேறு சில ஊடகங்களிலும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அவற்றிலும் கள்ள ஓட்டு காரணமாகவே இந்த வன்முறை நடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்திகளை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

இதனையடுத்து தேடுகையில் @Awhadspeaks என்கிற பயனர் ஐடியை உடைய கொண்ட எக்ஸ் பக்கத்தில் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக குறிப்பிட்டு வைரலாகும் இவ்வீடியோவை பதிவிட்டிருப்பதையும், இதற்கு அத்தகவல் தவறானது என்று மணிப்பூர் தலைமை தேர்தல் அதிகாரி மறுப்பு தெரிவித்து பதிவிட்டிருப்பதையும் காண முடிந்தது.

அப்பதிவில் இச்சம்பவம் மேற்கு இம்பாலில் உள்ள குராய் பகுதியில் நடந்ததாகவும், அப்பகுதியில் ஏற்கனவே மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக ஓட்டு மட்டும் விழுந்ததாக எவ்வித புகாரும் வரவில்லை என்றும், பொய் செய்தி பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்றும், கள்ள ஓட்டு போடப்பட்டதாக கூறியே அச்சம்பவம் நடைப்பெற்றது என்றும் தெளிவாகின்றது.

 Also Read: கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?

Conclusion

மணிப்பூரில் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டாலும் பாஜகவுக்கே ஓட்டு விழுந்ததால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடைக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த செய்தியானது ஏற்கனவே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.

Result: False

Our Sources
Report by NDTV on April 19,2024
Report by Indian Express on April 19,2024
Reoly Tweet from CEO of Manipur

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular