புதன்கிழமை, மே 15, 2024
புதன்கிழமை, மே 15, 2024

HomeFact Checkஅசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அஸ்ஸாம் கரிம்ஞ்ச் தொகுதியில் கிருபாநாத் என்கிற பாஜக வேட்பாளருக்காக , ஒரு நபர் 5 முறை வாக்களிக்கும் வீடியோ

Fact: வைரலாகும் வீடியோ சோதனை வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்டதாகும்.

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“Match Fixing..?அஸ்ஸாம் கரிம்ஞ்ச் தொகுதியில் கிருபாநாத் என்கிற பாஜக வேட்பாளருக்காக , ஒரு நபர் 5 முறை வாக்களிக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவுகிறது. Ballot unit – 0028661. தேர்தல் ஆணையமே..விளக்கம் எதிர்பார்க்கிறார்கள் மக்கள்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.

அசாமில்
Screenshot from x @shanmugamchin10

X Link/Archived Link

Screenshot from x @Sevvalakan5

X Link/Archived Link

Screenshot from x @ASHOK_070

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்படுவதாக பரவும் தகவல் உண்மையானதா?

Fact Check/Verification

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

 வைரலாகும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் கரீம்கஞ்ச் தேர்தல் ஆணையர் அலுவலகம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட வீடியோவில் இடம்பெற்றுள்ள வாக்கு மையத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரியான நஸ்ரூல் ஹாக்கு தபாதர் கூற்றின்படி தேர்தலுக்கு முந்தைய சோதனை வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்டது அந்த வீடியோ என்றும், நடைமுறைத் தேர்தல் ஆரம்பிக்கும் முன்பாக பதிவிடப்பட்ட சோதனை வாக்குகள் முழுமையாக CRC செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குப்பதிவு மையத்திற்கும் அனுமதியின் செல்போனை எடுத்துச்சென்ற காரணத்தினால் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் குறிப்பிட்ட சோதனை வாக்குகளை பதிவிட்ட நபர் மீது நடத்தை விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Also Read: கள்ள ஓட்டை மநீம நிர்வாகி தட்டிக் கேட்கும் வீடியோ 2024 பொதுத்தேர்தலில் எடுக்கப்பட்டதா?

Conclusion

அசாமில் பாஜக வேட்பாளருக்காக ஒரே நபர் 5 முறை வாக்களித்ததாகப் பரவும் வீடியோ தகவல் தவறானது என்பதும், சோதனை முறை வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
X Post From, District Commisioner Karimganj, Dated April 28, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular