மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மதுரை விஷால் தி மாலில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக வெளிவந்த பத்திரிக்கை செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
இந்த செய்தியை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆளும் திமுக ஆட்சியை விமர்சித்து வருகின்றனர்.



Also Read: ‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
மதுரை விஷால் தி மாலில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, விஷால் தி மாலின் தலைவர் இளங்கோவன் அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர், “இது முற்றிலும் பொய்யான செய்தி, பெண்களுக்கென்று தனி மதுக்கூடம் எப்போதும் எங்கள் மாலில் இருந்ததில்லை” என்று பதிலளித்தார்.
இதனையடுத்து இத்தகவலுக்கு ஆதாரமாக விளங்கும் பத்திரிக்கை செய்தி குறித்து ஆய்வு செய்தோம். அந்த பத்திரிக்கை செய்தி டிசம்பர் 1 ஆம் தேதி மாலை முரசு இதழில் வந்ததாக தடயங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்ததை நம்மால் காண முடிந்தது.

இதனையடுத்து மதுரை மாலை முரசு நிருபரைத் தொடர்புக் கொண்டு இச்செய்தி குறித்துக் கேட்டோம். “வைரலாகும் பத்திரிக்கைச் செய்தி கண்டிப்பாக மாலை முரசில் பிரசுரிக்கப்படவில்லை, இது எடிட் செய்யப்பட்டு பரப்பப்படும் பொய் செய்தி” என்று விளக்கமளித்தார்.
இதனையடுத்து மேற்காணும் செய்தி வேறு ஊடகங்களில் வெளிவந்துள்ளதா என்பதை தேடினோம். இத்தேடலில் ஏசியாநெட் நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் முரசில் கடந்த 2019 ஆம் ஆண்டு இச்செய்தி வெளிவந்துள்ளதை நம்மால் அறிய முடிந்தது.


மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில், மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் பத்திரிக்கைச் செய்தி இரண்டு வருடங்களுக்கு முந்தையது என்பது தெளிவாகின்றது.
அச்சமயத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது அதிமுகவாகும். ஆகவே இந்த நிகழ்வை ஆளும் திமுகவுடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவது ஏற்புடையதல்ல.
Also Read: நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி எனப்பரவும் வதந்தி!
Conclusion
மதுரையில் பெண்களுக்கென்று தனியாக மதுக்கூடம் தொடங்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் பத்திரிக்கை செய்தி இரண்டு வருடங்களுக்கு முந்தையது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Tamil Murasu: https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20191202-37175.html
Asianet News Tamil: https://tamil.asianetnews.com/life-style/special-tasmac-bar-for-girls-in-madurai-q1sbgz
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)