தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“என்னை பாக்குற போதெல்லாம் எப்ப டாஸ்மாக் கடைகளை மூடப் போறீங்கன்னு கேக்கறீங்களே , “ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணு”ன்னு சொல்லுவாங்கல்ல, அப்படித்தான், “ஆயிரம் பொய்யை சொல்லித்தான்” தேர்தல்ல ஜெயிக்க முடியும். தேர்தல்ல கொடுக்கிற வாக்குறுதிய நம்பினால் நீங்கள் முட்டாள். அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்? “ என்று கனிமொழி எம்.பி. பேசியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இததகவலை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



Also Read: மழைநீரில் முதலை வந்ததாக வதந்தி
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதன் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக மேற்காணும் கூற்றை கனிமொழி அவர்கள் எந்த இடத்திலாவது பேசியுள்ளாரா என்பதை தீவிரமாக தேடினோம். இந்த தேடலில் கனிமொழி அவர்கள் எந்த ஒரு இடத்திலும் இவ்வாறு பேசியதாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து வைரலாகும் தகவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம். அதில் தாமரை டிவி எனும் ஆன்லைன் ஊடகத்தில் இப்படத்தை முகப்பு படமாக (Thumbnail image) பயன்படுத்தி “சமூக வலைதளங்களில் வைரலாகும் கனிமொழி பேசிய காணொளி” என்று தலைப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.

அந்த வீடியோவில் கனிமொழி அவர்கள் கடந்த ஆட்சியில் பொது மேடையில் டாஸ்மாக் குறித்து பேசிய பேச்சு ஒன்று இடம்பெற்றிருந்தது. ஆனால் அவ்வீடியோவில் கனிமொழி அவர்கள் இப்பேச்சை கடந்த ஆட்சியில் பேசினார் என எவ்விடத்திலும் குறிப்பிடப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கனிமொழி அவர்களைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்,
“நான் அவ்வாறு பேசவே இல்லை. அது பொய்யானது. நான் டாஸ்மாக் கடைகளை கொஞ்சம் கொஞ்சமாக மூடப்படும் என்றே பேசியுள்ளேன்.”
என்று விளக்கமளித்தார்.
Also Read: ஆற்றில் அடித்துச் செல்லும் மாடுகள்; வைரலாகும் வீடியோ இந்தியாவில் எடுக்கப்பட்டதா?
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில், தேர்தலின் போது டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெளிவாகின்றது.
அரசியல் நோக்கிற்காக சில விஷமிகள் இதுபோன்ற கட்டுக்கதைகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். இது தவறானது மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றம் என்பதையும் நாங்கள் இங்கே கூறிக் கொள்கின்றோம்.
Conclusion
டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது என்று கனிமொழி கூறியதாக வைரலானத் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Kanimozhi Karunanidhi, Member of Parliament
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)