Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி என்றும் அவர் அருகே கண்டறியப்பட்ட குறிப்புகள் என்றும் புகைப்படத் தகவல் ஒன்று பலவிதமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“நேபாள் மலைப்பகுதியில் திபெத்தியதுறவி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். 201 வயதான அவர் உலகின் மிக வயதான நபராக கருதப்படுகிறார்.
அவர் ஆழ்ந்த மயக்கம்/தியானத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையை “தகடேட்” என்று அழைப்பர்.
முதன்முதலில் அவரை பார்த்தபோது மம்மி என்றே நினைத்தனர்.மம்மி என்று அவர்கள் நினைத்ததை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபிடித்தனர்!” என்பதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கூடவே, அவர் அருகில் மோடி பற்றிய, ரஜினிகாந்த் பற்றிய குறிப்பு, தாமரை மலராது என்கிற குறிப்பு இருந்தது என்பதாக பல்வேறு வகையிலும் இந்த தகவல் வைரலாகி வருகிறது. சிலர் இதுபற்றிய உண்மை அறிந்தும், பலர் தெரியாமலும் ஷேர் செய்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்?
நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி என்பதாகவும், அவர் அருகே இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் எனவும் பரவும் புகைப்படத்தகவல் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
அத்தேடலில், பல காலமாகவே குறிப்பிட்ட இந்த தகவல் வைரலாகி வருகிறது என்பது நமக்குத் தெரிய வந்தது. குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அப்போது, குறிப்பிட்ட புகைப்படம் எடுக்கப்பட்டது தாய்லாந்து நாட்டில் என்பது நமக்கு உறுதியானது. அதுகுறித்த செய்திகளும் நமக்குக் கிடைத்தது. தாய்லாந்து நாட்டினைச் சேர்ந்த புத்த மதத் துறவி லூவாங் ஃபோர் பியான் என்பவர்தான் குறிப்பிட்ட புகைப்படத்தில் உள்ளவர். அவர், கடந்த 2017 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று, 92 வயதான இவர் பாங்காங்கில் இறந்து விட்டார்.
புத்தமதத்தின் சில சடங்குகளை முன்வைத்து இவருடைய சடலம், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சவப்பெட்டியில் இருந்து எடுக்கப்பட்டு புத்தாடை அணிவிக்கப்பட்டு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கம்போடியாவைச் சேர்ந்த இவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதி தாய்லாந்தில் புத்தமதத் துறவியாக தொண்டு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி என்பதாகவும், அவர் அருகே இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் எனவும் பரவும் புகைப்படத்தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)