Claim: ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடினர்.
Fact: இத்தகவல் தவறானதாகும். இக்கூட்டம் ராணிப்பேட்டை ரத்தனகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட தெப்பக்குள திறப்பின்போது கூடிய கூட்டமாகும்.
ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூட்டமாக கூடி வழிபாடு நடத்தியதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
Fact Check/Verification
ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடியதாக வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவ்வீடியோவை தனித்தனி புகைப்படங்களாகப் பிரித்து, அவற்றை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம்.
அதில் LSM Spiritual எனும் யூடியூப் பக்கத்தில் ரத்தினகிரி கோவில் தெப்பக்குளம் என்று குறிப்பிட்டு பிப்ரவரி 13, 2023 அன்று வைரலாகும் இதே வீடியோ பதிவேற்றப்பட்டிருப்பதை காண முடிந்தது.
கூடவே பாலமுருகன், ரத்தினகிரி போன்ற வார்த்தைகள் ஹேஷ்டேகுகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடிந்தது. இதை அடிப்படையாக வைத்து பார்க்கையில் இவ்வீடியோவானது ரத்தினகிரி பாலமுருகன் கோயில் எடுக்கப்பட்டது என அறிய முடிகின்றது.

இதனையடுத்து ரத்தினகிரி, தெப்பக்குளம் உள்ளிட்ட உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி கூகுளில் தேடியதில் ராணிப்பேட்டை ரத்தனகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் அறுகோண தெப்பக்குளம் புதிதாக திறக்கப்பட்டதாக பிப்ரவரி 12, 2023 அன்று தினத்தந்தியில் செய்தி ஒன்று வெளிவந்திருப்பதை காண முடிந்தது. இச்செய்தியில் வெளியிடப்பட்டிருந்த தெப்பக்குளத்தின் படம் வைரலாகும் வீடியோவில் காணப்படும் தெப்பக்குளத்துடன் ஒத்துப்போவதையும் நம்மால் காண முடிந்தது.

தொடர்ந்து ஈடிவி பாரத் தமிழ்நாட்டிலும் இக்குளத் திறப்புவிழா குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியிலும் தெப்பக்குளத்தின் படம் இடம்பெற்றிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் நிகழ்வு ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் நடந்ததல்ல, அது சென்ற வருடம் ராணிப்பேட்டை ரத்தினகிரியில் நடந்தது என்பது தெளிவாகின்றது.
Also Read: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கப்படவில்லையா?
Conclusion
ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தில் கும்பகோணத்தில் பக்தர்கள் கூடியதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் அக்கூட்டம் ராணிப்பேட்டை ரத்தனகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட தெப்பக்குள திறப்பின்போது கூடிய கூட்டமாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Youtube Video from LSM Spiritual, Dated February 13, 2023
Report from Daily Thanthi, Dated February 12, 2023
Report from E TV Bharat Tamilnadu, Dated February 12, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)