திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு நாதக சார்பாக சீமான் செல்லுவதால், அனைத்து தம்பிகளும் திரள்நிதி கொடுத்து உதவ வேண்டும். ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியாக தந்தி டிவி பெயரில் பரவி வருகிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல தொண்டர்களிடம் திரள்நிதி கேட்ட சீமான் என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

”ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு நாதக சார்பாக சீமான் செல்லுவதால், அனைத்து தம்பிகளும் திரள்நிதி கொடுத்து உதவ வேண்டும். ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை” என்று இந்த நியூஸ்கார்ட் பரவுகிறது.

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு
Screenshot from Facebook/FascismArasu

Facebook Link

Screenshot from facebook/Shahulmedha

Facebook Link

Screenshot from X @sstwitz

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழ்நாட்டில் அசைவம் படைக்கப்படும் குலதெய்வ கோயில்களை திறக்க இன்று தடை என்றாரா நிர்மலா சீதாராமன்?

Fact Check/Verification

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல தொண்டர்களிடம் திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தந்தி டிவி பெயரில் பரவி வருகின்ற நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அதில் அப்படி எந்த செய்தியும் இடம்பெற்றிருக்கவில்லை. ஏற்கனவே, சீமான் திரள் நிதி கேட்பதாக இதே போன்று போலியான நியூஸ்கார்டுகள் பரவியதை நாம் தகர்த்துள்ளோம்.

எனவே, தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்தை வைரல் நியூஸ்கார்ட் குறித்து தொடர்பு கொண்டு கேட்டபோது அவர், “சீமான் குறித்து பரவும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.

Also Read: ராமர் கோவில் கும்பாபிஷேகம்; இறந்தவர்களை தகனம் செய்ய 5 மாநிலங்களில் தடையா?

Conclusion

ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்ல தொண்டர்களிடம் திரள்நிதி கேட்ட சீமான் என்று பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது  நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Vinoth, Thanthi TV digital, Dated January 22, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular